தமிழில் இப்படி ஒரு கிறிஸ்தவ இணையதளமா ?


இணைய வடிவமைப்பில் மிகவும் என்னை பிரமிக்க வைத்ததுடன் உண்ணர்வை தளத்துடன் ஒன்றிக்க வைக்கின்றது  அதுவும் தமிழில் இப்படி ஒரு கிறிஸ்தவ இணையதளமா ? என என்னை வியக்கவைத்தது இத் தளதத்தை தந்தமைக்காக முதற் கண் தேவனுக்கு கோடானகோடி நன்றி இந்த சபையின் ஸ்தாபகர்  அருட்தந்தை ஜான் .ஜோசப் அடிகாளார் மற்றும் சபை நிர்வாகிகள் இணையதள வடிவமைப்பாளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளும் பாராட்டுகளும் உரித்தாகுக .
இத் தளத்தில் பல ஆவிக்குரிய செய்திகள் ,ஆவிக்குரிய பாடல்கள் மற்றும் ஜெப அறை  நீங்கள் தனிமையில் இல்லை. இருஇரவு பகல் பத்து நான்கு மணி நேரமும், இந்த அறையில், உங்களோடு, ஒரு கூட்டம் ஊழியர்கள், நோன்பிருந்து ஜெபிக்கிறார்கள். அவர்களது பலியாகும் ஜெபம், இந்த அறையிலிருந்து, விண்ணை நோக்கி, எழும்புகிறது. என்ற உத்தரவாதம் அளிக்கின்றனர் அத்துடன் தந்தை அவர்களை Skype மூலம் இந்திய நேரப்படி  சாயுங்காலம் 7 pm to 9pm வரை தந்தை அவர்களை தொடர்பு கொள்ளலாம் இவ் வசதி வேறு எங்கும் இல்லை எனவே ஒருதடவை இந்த இணைய தளத்துக்கு செல்லுங்கள் ஆவிக்குரிய வாழ்கையில் வளருங்கள் 
Continue Reading →

தேவனின் இரக்கம் தேவனின் மன்னிப்பு வெளிப்பட்ட நாள் இன்றே

இன்று தேவனின் இரக்கம்  தேவனின் மன்னிப்பு வெளிப்பட்ட நாள் இன்றே.  இன்றே நினிவேயின் மக்கள் உபவாசித்து செபித்து தேவனிடமிருந்து மன்னிப்பை பெற்று கொண்டது இன்றைய நாளே இதனை நினைவு கூறும் முகமாக Orthodox  கிறிஸ்த்தவர்கள் இன்றிலிருந்து மூன்று நாட்கள்   செபித்து வருகின்றனர்;.இறைவனது கிருபையால்  நானும் இன்று அதிகாலை அவர்களுடன் செபிக்கும் பாக்கியம் பெற்றேன்.
 நீங்களும் இன்று உங்களது பாவங்களுக்காக மனம் வருந்தி இறைவனிடம் மன்னிப்பு கேட்டு அற்புதத்தை பெற்றுகொள்ளுங்கள்; 

காண்க வேதத்தில்

யோனா 3 

பிறகு கர்த்தர் யோனாவிடம் மறுபடியும் பேசினார். கர்த்தர், “அந்த பெரிய நினிவே நகரத்திற்குப் போ, நான் உனக்குச் சொன்னவற்றைப் பிரசங்கம் செய்” என்றார்.
எனவே யோனா கர்த்தருக்குக் கீழ்ப்படிந்தான், அவன் நினிவே நகரத்திற்குப் போனான். நினிவே ஒரு மிகப்பெரிய நகரம். ஒருவன் இந்நகரத்தைக் கடந்துபோக மூன்று நாட்கள் நடக்க வேண்டும்.
யோனா நினிவே நகரத்தின் நடு இடத்திற்குச் சென்று பிரசங்கம் செய்ய ஆரம்பித்தான். யோனா, “40 நாட்களுக்குப் பிறகு நினிவே நகரம் அழிக்கப்படும்!” என்றார்.
நினிவேயின் மக்கள் தேவனிடமிருந்து வந்த செய்தியை நம்பினார்கள். மக்கள் சாப்பிடாமல் உபவாசம் இருந்து அவர்களின் பாவங்களை நினைத்து மனந்திரும்ப முடிவு செய்தார்கள். மக்கள் சிறப்பான ஆடையை அணிந்து தங்கள் மன வருத்தத்தைக் காட்டினார்கள். அந்நகரிலுள்ள மக்கள் அனைவரும் இதனைச் செய்தார்கள். மிக முக்கியமான மக்களும், முக்கியமற்ற மக்களும் இதனைச் செய்தார்கள்.
நினிவேயின் அரசன் இவற்றைக் கேள்விப்பட்டான், அரசனும் தான் செய்த தீங்குகளுக்காக வருத்தப்பட்டான், எனவே அரசன் தனது சிம்மாசனத்தை விட்டு இறங்கினான். அரசன் தனது அரசனுக்குரிய ஆடையைக் கழற்றிப் போட்டுவிட்டு துக்கத்தைக் காட்டுவதற்குரிய சிறப்பு ஆடையை அணிந்துகொண்டான். பிறகு அரசன் சாம்பல்மேல் உட்கார்ந்தான், அரசன் ஒரு சிறப்புச்செய்தியை எழுதி நகரம் முழுவதற்கும் அனுப்பினான்.
அரசனிடமிருந்தும் அவனது முக்கிய மந்திரிகளிடமிருந்தும் வரும் கட்டளை:
கொஞ்ச காலத்திற்கு எம்மனிதனும் மிருகமும் உண்ணக் கூடாது. மாடுகளும் ஆடுகளும் கூட வயலுக்குப் போகக்கூடாது. நினிவேயில் வாழ்கிற எதுவும் உணவு உண்ணவோ தண்ணீர் குடிக்கவோ கூடாது. ஆனால் ஒவ்வொரு மனிதனும் மிருகமும் துக்கத்தைக் காட்டும் சிறப்பு ஆடையால் தன்னை மூடிக்கொள்ள வேண்டும். மக்கள் தேவனிடம் உரக்கக் கதறவேண்டும். ஒவ்வொருவரும் தனது வாழ்வை மாற்றித் தீங்கு செய்வதை நிறுத்த வேண்டும். பிறகு தேவன் மனம் மாறி தாம் திட்டமிட்ட செயல்களைச் செய்யாமல் விடலாம். தேவன் ஒருவேளை தன்னை மாற்றிக்கொண்டு நம் மீது கோபமில்லாமல் இருக்கலாம். அப்போது நாம் தண்டிக்கப்படாமல் இருக்கலாம்.

10 தேவன் மக்கள் செய்தவற்றைப் பார்த்தார். மக்கள் தீமைகள் செய்வதை நிறுத்தியதைப் பார்த்தார். எனவே தேவன் மாறித் தனது திட்டத்தைச் செயல்படுத்தவில்லை. தேவன் மக்களைத் தண்டிக்கவில்லை.
தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்

 

Continue Reading →

எனது இந்த வியாதிக்கு காரணம் என்ன பாகம் 02?

எனது இந்த வியாதிக்கு காரணம் என்ன பாகம் 01 ? எனது பாவமா? அல்லது எனது முன்வினை பயனா ? இறைவன் என்னை கைவிட்டு விட்டாரா?  என பல விதமான கேள்விகள் உங்கள் மனதில் தொன்றலாம். இந்த புனிதை இப்படி துடி துடிப்பது ஒரு பெண் எந்த உணவையும் உண்ணாமல் 60 வருடங்கள் நற்கருணை மட்டுமே சாப்பிட்டு உயிர் வாழ்ந்த உண்மை கதை
                               நோன்புகாலத்தில் இந்த காணொளியை முதன் முதலில்  தமிழில் தருவதில் தேடிவந்த தெய்வம் தளம் மகிழ்ச்சி அடைகிறது  எதிர் காலத்தில் இப்படியான முயற்சிக்கு உங்களது ஆதரவில் தங்கியுள்ளது தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென் நன்றி
மேலதிக விபரங்கட்கு  http://fr.wikipedia.org/wiki/Marthe_Robin
Continue Reading →

திருப்பலியின் சக்தி என்ன ?

கத்தோலிக்க  திருச் சபையின்  தனித்துவம்  என்ன ? திருப்பலியின்  சக்தி என்ன ?விளக்கம் அளிக்கின்றார் தந்தை பால்றோபின்சன் அவர்கள் 


Continue Reading →