எங்கள் இருவருக்கும் இடையில் மத்தியஸ்தன் இல்லையே.!

ஆதாம் தொடக்கம் இயேசு வரை உள்ள காலம் பழைய ஏற்பாடு காலம் என அழைக்கபடுகின்றது .இக் காலங்களில்  மனிதனின் கீழ்படியாமையினாலும் அறியாமையினாலும் செய்த தவறினால்  இழந்த பல அரிய கொடைகள் அரிய ஆசீர்வாதங்களை எந்த வித கவலையும் ,எந்த வித வியாதியும் இன்றி எந்த நேரமும்  சந்தோசமாக வாழும் வாழ்கையை  மீண்டும் பெற்று கொடுக்க
பல வழிகளில் பல மனிதர்களுடன் இணைந்து சக்கிலி தொடராக மீட்பு திட்டத்தை நிறைவேற்றி வருகிறார் இறைவன்  .மனிதர்கள் பல வழிகளில் தவறிழைத்து  துரோகம் செய்தபோதும் தகப்பனுக்குரிய மனநிலையுடன் மன்னித்து மீண்டும்   தூக்கி விட்டு மீட்பு திட்டத்தை இன்றுவரை தொடர்ந்து வருகிறார்.இயேசு மனித அவதாரம் எடுத்து பாவத்தில் இருந்து மீட்டு  எம்மை இரசித்து பரிசுத்தவானாக மாற்றி உள்ளார். அத்துடன்  எம்மை பற்றி இரவும் பகலும் தேவனுக்கு முன்பாக நின்று சாத்தான் குற்றம் சுமத்தி வருகிறான் .காண்க    
வெளிப்படுத்துதல்  12 
9. உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம் தள்ளப்பட்டது; அது பூமியிலே விழத்தள்ளப்பட்டது, அதனோடேகூட அதைச்சேர்ந்த தூதரும் தள்ளப்பட்டார்கள்.

10. அப்பொழுது வானத்திலே ஒரு பெரிய சத்தமுண்டாகி: இப்பொழுது இரட்சிப்பும் வல்லமையும் நமது தேவனுடைய ராஜ்யமும், அவருடைய கிறிஸ்துவின் அதிகாரமும் உண்டாயிருக்கிறது; இரவும் பகலும் நம்முடைய தேவனுக்குமுன்பாக நம்முடைய சகோதரர்மேல் குற்றஞ் சுமத்தும்பொருட்டு அவர்கள் மேல் குற்றஞ்சாட்டுகிறவன் தாழத் தள்ளப்பட்டுப்போனான்.
இதனை யோபுவின் வாழ்கையில் காணலாம் .இந்த இடத்தில் யோபுவை பற்றி தேவன் தாமே நன்மையானதை சான்று பகர்கிறார் .ஆனால் தேவனுக்கு முன்பாக நின்று யோபுசார்பாக பேச ஒருவரும் இல்லை

     யோபு1 அதிகாரம் 
    8. கர்த்தர் சாத்தானை நோக்கி: என் தாசனாகிய யோபின்மேல் கவனம் வைத்தாயோ? உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய அவனைப்போல பூமியில் ஒருவனும் இல்லை என்றார்.
 யோபு 9 அதிகாரம்
    19. பெலத்தைப் பார்த்தால், அவரே பெலத்தவர்; நியாயத்தைப்  பார்த்தால், என் பட்சத்தில் சாட்சி        சொல்லுகிறவன் யார்?
32. நான் அவருக்குப் பிரதியுத்தரம் சொல்லுகிறதற்கும், நாங்கள் கூடி நியாயத்திற்கு வருகிறதற்கும், அவர் என்னைப்போல மனுஷன் அல்லவே.
33. எங்கள் இருவர்மேலும் தன் கையை வைக்கத்தக்க மத்தியஸ்தன் எங்களுக்குள் இல்லையே.
மத்தியஸ்தன்  என்ற இந்த இடம் பழைய ஏற்பாட்டு காலத்தில் எபோதும் வெற்றிடமாக இருந்தது .நமது தேவனுக்கும் எனது பிள்ளைகளை சார்பாக இரவும் பகலும் பரிந்துரைக்கவும் அவர்களை பற்றி நன்மையானவைகளை பேச மத்தியஸ்தன் யாரும் இல்லை என்று பரிதவித்தார் ,ஏங்கினார் .இந்த ஏக்கத்தை சரி செய்ய இந்த வெற்றித்தை நிரப்ப நமது தேவன் சித்தம் கொண்டார் . எனவே பரலோகத்தின் தேவன் இயேசு என்னும் நாமத்தில் மனித அவதாரம் எடுத்து பரலோக மகிமையைவிட்டு இறங்கி வந்து சகல விதத்திலும் மனிதரைப் போல் ஆகி உனக்காக மாகா வியாகுலப்பட்டு, சிலுவையில் இரத்தம் சிந்தி மரித்து சகல பாவத்துக்கும் பரிகாரம் செய்து தூய தந்தையின் வலதுபுறம் அமர்ந்து இரவும் பகலும் எங்களுக்காக பரிந்து பேசி கொண்டும் எங்களை பாதுகாத்து நாம் பரலோகத்தில் நித்தியம் நிதியமாக அவருடனே வாழ எங்களை தினம் தினம் ஆயுதத்படுத்தி  வருகிறார் .அன்று  யோபுவிற்கு கிடைக்காத இந்த பாக்கியம் எங்களிற்கு கிடைத்துள்ளது எனவே இந்த பாக்கியதை நாம் பெற்றுகொள்ள இயேசு சொந்த இரட்சகராக ஏற்றுகொண்டு  அவரது செட்டைகளின் கீழ் அடைக்கலமாக பாதுகாப்பாக சந்தோசமாக வாழ்வாம் .சகல துதிகன மிகிமை என் அருமை அப்பா இயேசுவுக்கே

நீ என் மகன் நான் உனது தகப்பன்


0 comments:

Post a Comment