மொழி பெயர்ப்பாளராக பரிசுத்த ஆவி ???

" திருத்தூதர் பணிகள் 2 ஆம் அதிகாரம்  6 ஆம் வசனம் அந்த ஒலியைக் கேட்டுக் கூடிய ஒவ்வொருவரும் தம்  சொந்த  மொழிகளில்  அவர்கள்  பேசக்  கேட்டு குழப்பம் அடைந்தனர். எல்லோரும் மலைத்துப் போய் இதோ  பேசுகின்ற  இவர்கள்  கலிலேயர்  அல்லவா ? அவ்வாறு  இருக்க  நம்  தாய்  மொழியில்் இவர்கள் பேசுவதை நாம் கேட்பது எப்படி என வியந்தனர். "i

மேலுள்ள  வசனத்தில்  கூறப்பட்டது புனை கதையா  ? நடைமுறை  சாத்தியமானதா  ? எனக்குத்  தெரிந்த   வகையில்  ஆராய்கின்றேன்.
தற்பொழுது இணையத்தில்   Google Translate   பி ங் போன்றன எமது தாய் மொழியில் தட்டச்சுச் செய்ய உலகின் பல  மொழிகளில் கணணி மொழி பெயர்த்துத்  தருகின்றது. அத்துடன் அம்மொழியை வாசித்தும் ஓலி வடிவத்தையும்  தருகின்றது. இதன்  மூலம் ஒரு மொழியை ஒரு நொடிப் பொழுதில்  உலகின் பல மொழிகளில் மொழி பெயர்ப்பது சாத்தியம் என விஞ்ஞான ரீதியாக  நிரூபனம்   ஆகின்றது.
    
மேலே  வசனத்தில் கூறப்பட்ட     சம்பவம்    சீடர்கள்  மீது   பரிசுத்த ஆவி   இறங்கிய  பின்னரே  நடை  பெறுகின்றது . மேலுள்ள பந்தியை மொழி பெயர்ப்பாளராக கணணி தொழிற்படுகின்றது ஆனால் அன்று மொழி பெயர்ப்பாளராக பரிசுத்த ஆவியானவரே. திருத்தூதர் தம் சொந்த மொழியில் பே  பரிசுத்த ஆவியானவரே  மொழி  பெயர்த்து  அவரவர்  சொந்த மொழியில்  மாற்றி  அவர்களது  காதுகளில்   வைத்தார். ஆகவே      வேத வசனங்கள் கற்பனையோ ? கட்டுக்கதையோ இல்லை என்பது  விஞ்ஞான ரீதியாக  நிரூபனம்   ஆகின்றது.  மனிதக்  கைகளால்  ஆன  கணனியால்  இவ்வளவு  செய்ய முடியும் போது பரிசுத்த ஆவியால் எவ்வளவு செய்ய முடியும் .   
தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்

0 comments:

Post a Comment