ஜேசு சாமி என்ற ஒருவர் இருக்கிறார்

                                       உன் திராணிக்குமேலே சோதிக்கமாட்டேன்
சஞ்சலம் நிறைந்த வாழ்விலும்,சங்கடம் மலிந்த உலகிலும்,ஒவ்வொரு மனிதனையும் துயரத்தில் ஆழ்த்தி துயரப்படுத்தும் இவ்வேளையில், எரிகின்ற வீட்டில்  புடுங்குவது  போலவும், மதிலால் விழ்ந்தவனை மாடு ஏறி மிதிப்பது போலவும், பலர் மேலும் மேலும் கடினமான வார்த்தைகளாலும், தீய  வார்த்தைகளாலும்,  ஏசி உங்களை விரக்த்தியின்  விளிம்புக்குக் கொண்டு போகலாம். இதற்கு முதற் காரணம் ஒவ்வொரு மனிதனின் தனிமை உணர்வு எனக்காக யாருமே  இல்லையே! நான்  சொல்வதை  யாரும் கேட்கவில்லையே , எல்லோரும்    எனக்கு தீமையே செய்கின்றனர். நன்மை செய்ய எவருமே இல்லையே, என்ற எண்ணமே, எந்த  மனிதனையும் விரக்த்தியின்  விளிம்புக்கு கொண்டு போகிறது. 

நண்பனே  உனக்காகப் பரிதாபப்படவும், உனக்காக இரக்கப்படவும், ஏன் உனக்காக தனது   உயிரையே  உனக்காகக் கொடுத்த ஜேசு சாமி என்ற ஒருவர் இருக்கிறார்




.'' என் உள்ளங்கையில் உனது பெயரை எழுதி வைத்திருக்கின்றேன்''  என்கிறார். ஜேசு ''முதல் தரமான ஆடையைக் கொண்டு உடுத்துங்கள். இவனுடைய கைக்கு மோதிரமும் ,காலுக்கு  மிதியடியும்,  அணியுங்கள்  கொளுத்த கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள். நாம் மகிழ்து  விருந்து  கொண்டாடுவோம் 
ஏனெனில் என் மகன் இவன் இறந்து போயிருந்தான் மிண்டும்  உயிர்  பெற்று வந்திருகின்றான் . காணாமல் போயிருந்தான்.  மிண்டும்  கிடைத்துள்ளான்'' என்கிறார் ஜேசு சாமி (காண்க லூக்கா அதிகாரம் 15:வசனம்  22-25 ) ஜேசு மீது விசுவாசம் கொண்டு ஏற்றுக் கொண்டால் போதும். அவர் சகலதையும் பார்த்து  கொள்வார் . உங்களது தேவைகளுக்காக எப்படி செபிப்பது   என்று உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். அதற்காக நீங்கள் கவலைப்பட  வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு இரண்டு  தளம் உள்ளது.



1) இத்தளத்தில் நீங்கள் Skype மூலம் இந்திய நேரப்படி  சாயுங்காலம் 7 pm to 9pm வரை தந்தை அவர்களை தொடர்பு கொள்ளலாம் அத்துடன் ஜெப அறையில் நீங்களும்    செபித்து உங்களது தேவைகளை பெற்று கொள்ளுங்கள் இந்த ஜெப அறையில் எப்பொதும் நீங்கள் தனிமையில் இல்லை. இரவு பகல் இருபத்து நான்கு மணி நேரமும், இந்த அறையில், உங்களோடு, ஒரு கூட்டம் ஊழியர்கள், நோன்பிருந்து ஜெபிக்கிறார்கள். அவர்களது பலியாகும் ஜெபம், இந்த அறையிலிருந்து, விண்ணை நோக்கி, எழும்புகிறது. எனவே நீங்கள் தனியாகவில்லை  அத்துடன் இந்த தளத்தில் வடிவமைப்பு என்னை பிரமிக்க வைத்ததுடன் உண்ணர்வை தளத்துடன் ஒன்றிக்க வைக்கின்றது  link http://www.catholicpentecostmission.in/prayer_room.html

 2) இத்தளத்தில் உங்களது செபத்தேவை என்ன என்பதை தெரிவு  செய்து  அந்த சகோதரன் செபிக்கும்  போது   நீங்களும்  விசுவாசத்துடன் செபித்து அற்புதத்தை பெற்றுக் கொள்ளுங்கள் இத்தளத்தில் Tamil    — > Bro. Appadurai    — > go என்பதை கிளிக் பண்ணவும்   link http://www.prayermountain.in/Home/Audio_Prayer.php


இரண்டு  தளங்களில் உங்களுக்கு விரும்பியதில் இணைத்து அற்புதத்தை பெற்று கொள்ளுங்கள்  உங்களை கத்தர் ஜேசு நிறைவாக  ஆசிர்வதிப்பாராக. ஆமென் 
உன்னைக் காக்கும் தேவன் தூங்குவதுமில்லை, அயர்வதுமில்லை.

உன்னைக் காக்கும் தேவன் தூங்குவதுமில்லை, அயர்வதுமில்லை.

0 comments:

Post a Comment