நரகத்தின் வாசல் இதுதானோ ?

சொர்கத்தின் வாசல் படி, என்ற சொல்லைக் கேட்டிருப்பீர்கள். ஆனால் அது எங்கே இருக்கிறது என்று கேட்டால் யாருக்கும் தெரியாது. சொர்க்கம் என்றால் அது வானத்தில் அல்லது இந்திரலோகத்தில் இருப்பதாக பலரும் கூறுவார்கள். ஆனால் பூமியில் ஒரு நரகத்தின் வாசல் படி பலகாலமாக இருக்கிறதே யாராவது அறிவீர்களா ?

ஆம் இதனை ஆங்கிலேயர், நரகத்தின் வாசல் என்று அழைக்கிறார்கள். டேக்மேனிஸ்தான் (அக்பானிஸ்தானுக்கு அருகில் உள்ள நாடு) என்னும் நாட்டில் உள்ள கராக்கும் என்னும் பாலைவனத்தில் இந்த நரகத்தின் வாசல் காணப்படுகிறது. சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் திடீரெனத் தோன்றிய இந்தத் துளையில்(ஓட்டையில்) இருந்து எப்போதும் தீ பிளம்பு கக்கியவண்ணம் உள்ளது. இது எரிமலை அல்ல. எப்போதும் எரிந்துகொண்டு இருக்கும் இந்த ஓட்டையின் ஆழத்தை எவராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. காரணம் அதனுள் எரியும் நெருப்பு ! உலகில் உள்ள அதிசயங்களில் ஒன்றாக இதனை ஏன் இன்னும் இணைக்கவில்லை என்று நினைக்கும் அளவுக்கு , இது அமைந்துள்ளது.




























 நரகத்தை பற்றி இறைவன் தளத்திலிருந்து 

ஜேசு சாமி என்ற ஒருவர் இருக்கிறார்

0 comments:

Post a Comment