தந்தை பால்றோபின்சன் வல்லமை கீதங்கள இல் இருந்து பாடல் உலகத்தின் இரட்சகரே இவரது தளம் http://frpaulrobinson.tamilgoodnews.com/
உண்மையில் நாம் வாழும் காலம் இறுதி காலமா ?
உண்மையில் நாம் வாழும் காலம் இறுதி காலமா ?நாம் இறுதி காலத்தில் வாழ்கிறோம் என்று எப்படி அறிந்து கொள்வது ?
2 தெசலோனிக்கேயர் 2
2 ஒரு ஆவியினாலாவது, வார்த்தையினாலாவது, எங்களிடத்திலிருந்து வந்ததாய்த் தோன்றுகிற ஒரு நிருபத்தினாலாவது, கிறிஸ்துவினுடைய நாள் சமீபமாயிருக்கிறதாகச் சொல்லப்பட்டால், உடனே சஞ்சலப்படாமலும் கலங்காமலும் இருங்கள்.
3 எவ்விதத்தினாலும் ஒருவனும் உங்களை மோசம்போக்கதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் விசுவாச துரோகம் முந்தி நேரிட்டு, கேட்டின் மகனாகிய பாவமனுஷன் வெளிப்பட்டாலொழிய, அந்த நாள் வராது.4 அவன் எதிர்த்துநிற்கிறவனாயும், தேவன் என்னப்படுவதெதுவோ, ஆராதிக்கப்படுவதெதுவோ, அவையெல்லாவற்றிற்கும் மேலாகத் தன்னை உயர்த்துகிறவனாயும், தேவனுடைய ஆலயத்தில் தேவன்போல உட்கார்ந்து, தன்னைத்தான் தேவனென்று காண்பிக்கிறவனாயும் இருப்பான்.
இவ் வசனத்தின் முதலில் கேட்டின் மகனாகிய பாவமனுஷன்
வெளிப்படவேண்டும். அதற்காண ஆயதங்கள் தற்பொழுது உலகத்தில் நடை பெற்றுக் கொண்டிருகிறது. The Satanic Bible 1969 இல் எழுத பட்டு அதற்கான ஆலயம் சின்னம் என்பன உள்ளது. இதில் வேடிக்கை என்ன வென்றால் இவர்களது சின்னம் யூதர்களின் நட்சத்திரதை கேலி செய்வது போல அமைத்து இருகின்றனர் .உலகில் பல மதங்கள் உள்ளன ஏன் யூதர்களின் நட்சத்திரதை போல அமைக்க வேண்டும் ?
குறிப்பு ;( The Satanic Bible என google இல் தேடினால் காண முடியும்.)
காரணம் கண்க
நான் முந்தினவரும், நான் பிந்தினவருந்தானே, என்னைத் தவிர தேவன் இல்லையென்று இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தரும் சேனைகளின் கர்த்தராகிய அவனுடைய மீட்பரும் சொல்லுகிறார். (ஏசாயா 44:6)
இதில் இருந்து இஸ்ரவேலின் தெய்வமே உண்மை தெய்வம். எனவே அவருக்கு எதிரியான கேட்டின் மகனாகிய பாவமனுஷன் கத்தரால் தாவீது அரசருக்கு அருளப்பட்ட நட்சத்திர சின்னதை கேலி செய்வது போல அமைத்ததுடன் .மேலுள்ள வேத வசனம் நிறைவேற தன்னைத்தான் தேவனென்று காண்பிக்க தேவ சின்னதை போல அமைத்தான் .காண்க (தேவன் என்னப்படுவதெதுவோ, ஆராதிக்கப்படுவதெதுவோ, அவையெல்லாவற்றிற்கும் மேலாகத் தன்னை உயர்த்துகிறவனாயும், தேவனுடைய ஆலயத்தில் தேவன்போல உட்கார்ந்து, தன்னைத்தான் தேவனென்று காண்பிக்கிறவனாயும் இருப்பான்)
எனவே நாம் இறுதிகாலத்தில் வாழ்கின்றோம் என உறுதியாக அறிந்து கொள்ளலாம்.
(உரோ.13:11)
11 நித்திரையைவிட்டு எழுந்திருக்கத்தக்க வேளையாயிற்றென்று, நாம் காலத்தை அறிந்தவர்களாய், இப்படி நடக்கவேண்டும்; நாம் விசுவாசிகளானபோது இரட்சிப்பு சமீபமாயிருந்ததைப் பார்க்கிலும் இப்பொழுது அது நமக்கு அதிக சமீபமாயிருக்கிறது.
12 இரவு சென்றுபோயிற்று, பகல் சமீபமாயிற்று; ஆகையால் அந்தகாரத்தின் கிரியைகளை நாம் தள்ளிவிட்டு, ஒளியின் ஆயுதங்களைத் தரித்துக்கொள்ளக்கடவோம்.
13 களியாட்டும் வெறியும், வேசித்தனமும் காமவிகாரமும், வாக்குவாதமும் பொறாமையும் உள்ளவர்களாய் நடவாமல், பகலிலே நடக்கிறவர்கள்போலச் சீராய் நடக்கக்கடவோம்.
14 துர்இச்சைகளுக்கு இடமாக உடலைப் பேணாமலிருந்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைத் தரித்துக்கொள்ளுங்கள்.
தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்
13 களியாட்டும் வெறியும், வேசித்தனமும் காமவிகாரமும், வாக்குவாதமும் பொறாமையும் உள்ளவர்களாய் நடவாமல், பகலிலே நடக்கிறவர்கள்போலச் சீராய் நடக்கக்கடவோம்.
14 துர்இச்சைகளுக்கு இடமாக உடலைப் பேணாமலிருந்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைத் தரித்துக்கொள்ளுங்கள்.
தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்
என் பாவம் நினைத்து புலம்பி நான் அழுகின்றேன்!
தந்தை பால்றோபின்சன் அவர்கள் இலங்கை தமிழ் கதோலிக்க ஒரு தேவமனிதர் இவரது பங்கு மட்டக்களப்பில் உள்ள தேத்தாதீவு வில் உள்ளது இவரது செய்திகளை பாடல்களை இத்தளத்தில் நீங்கள் காணலாம்.http://frpaulrobinson.tamilgoodnews.com/
தந்தை பால்றோபின்சன் வல்லமை கீதங்களஇல் இருந்து பாடல் என் பாவம் நினைத்து புலம்பி நான் அழுகின்றேன்!
என் பாவம் நினைத்து புலம்பி நான் அழுகின்றேன்!
கண்ணீரால் நிரம்பி உம் பாதம் நனைக்கின்றேன்...
கூந்தலால் துடைக்கின்றேன்.....
என் பாவம் நினைத்து புலம்பி நான் அழுகின்றேன்!
கண்ணீரால் நிரம்பி உம் பாதம் நனைக்கின்றேன்...
கூந்தலால் துடைக்கின்றேன்.....
மன்னியும் தேவா! என் பாவம் மன்னித்தருளும்..
மன்னியும் தேவா! என் பாவம் மன்னித்தருளும்..
என் பாவம் நினைத்து புலம்பி நான் அழுகின்றேன்!
கண்ணீரால் நிரம்பி உம் பாதம் நனைக்கின்றேன்...
கூந்தலால் துடைக்கின்றேன்.....
அயலானின் சொத்தை நான் அபகரித்தேன்...
அடுத்தவன் நாமத்தை பழுதாக்கினேன்....
அயலானின் சொத்தை நான் அபகரித்தேன்...
அடுத்தவன் நாமத்தை பழுதாக்கினேன்....
பாவஅறிக்கை நான் செய்யவில்லை...
பாவி உன் அன்பை மறந்தேனையா!
பாவஅறிக்கை நான் செய்யவில்லை...
பாவி உன் அன்பை மறந்தேனையா!
மன்னியும் தேவா! என் பாவம் மன்னித்தருளும்..
மன்னியும் தேவா! என் பாவம் மன்னித்தருளும்..
என் பாவம் நினைத்து புலம்பி நான் அழுகின்றேன்!
கண்ணீரால் நிரம்பி உம் பாதம் நனைக்கின்றேன்...
கூந்தலால் துடைக்கின்றேன்.....
ஆசை என் ஆன்மாவை அழிக்கின்றது...
அனுதினம் தீமையை நினைக்கின்றது..
ஆசை என் ஆன்மாவை அழிக்கின்றது...
அனுதினம் தீமையை நினைக்கின்றது..
களவு பொய் காமம் என்னில் நிறைந்துள்ளது....
பாவி உன் அன்பை மறந்தேனையா!
களவு பொய் காமம் என்னில் நிறைந்துள்ளது....
பாவி உன் அன்பை மறந்தேனையா!
மன்னியும் தேவா! என் பாவம் மன்னித்தருளும்..
மன்னியும் தேவா! என் பாவம் மன்னித்தருளும்..
என் பாவம் நினைத்து புலம்பி நான் அழுகின்றேன்!
கண்ணீரால் நிரம்பி உம் பாதம் நனைக்கின்றேன்...
கூந்தலால் துடைக்கின்றேன்.....
கூந்தலால் துடைக்கின்றேன்
400 வருடங்கள் உயிருடன் வாழும் மனிதர்
கைலாச மகரிஷியை பார்க்க வேண்டுமென்றால் இமயமலைக்குத்தான் போக வேண்டும். அங்க தான் இருக்கிறார். அவரை முதலில் பார்த்து அவர் சொன்ன காரியங்களை புத்தகமாக எழுதியது சாது சுந்தர் சிங். சாது சுந்தர் செல்வராஜும் அதை revise பண்ணி தற்போது எழுதியிருக்கிறார்.
கைலாச மகரிஷியின் வாழ்க்கை வரலாறு
இவர் எகிப்திலுள்ள அலெக்சாண்டிரியா பட்டணத்தில் 1594 ஆம் ஆண்டு ஒரு தீவிரமான முஸ்லீம் குடும்பத்தில் பிறந்தார். முகமது நபியை தீவிரமாக பின்பற்றுபவராக வளர்க்கப்பட்டிருக்கிறார். நல்ல ஆவிக்குரிய ஞானம் வரும்படியாக, தனது 30 ம் வயதில் உலகத்தைத் துறந்து, துறவிபோல் வாழ்ந்து , இரவும் பகலும் தியானத்திலே கழித்திருக்கிறார்.ஆனாலும் அவர் ஆத்துமாவில் கொஞ்சமும் அமைதியோ, சந்தோஷமோ உண்டாகவில்லை. இப்படி ஆத்தும வருத்தத்தோடு இருக்கையில், ஒரு நாள் ஒரு கிறிஸ்தவ ஊழியர் இந்தியாவிலிருந்து பிரசங்கம் பண்ண எகிப்து வந்திருப்பதாகக் கேள்விப்பட்டு,அவரைப் பார்க்க வேண்டும் என்று மிகவும் விருப்பப்ட்டு பெஞ்சில் அமர்ந்திருக்கையில், எதிர்பாராத விதமாக அந்த பரிசுத்தவான் இவர் முன் தோன்றியிருக்கிறார்.
அவர் இயேசு கிறிஸ்து பற்றி எடுத்து சொல்லி, அவர் இரட்சகர், பாவங்களை மன்னிக்கிறவர், வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களுக்கு இளைப்பாறுதல் தருகிறவர் என்று சில நாட்கள் சத்தியம் சொல்ல, அதைக் கேட்டு, இவர் உள்ளம் இயேசு கிறிஸ்துவின் மேல் இழுக்கப்பட்டு, அவரை இரட்சகராக ஏற்றுக் கொண்டிருக்கிறார். ஏற்றுக் கொண்டவுடன் இவர் ஆத்துமா சொல்லி முடியாத சந்தோஷத்தாலும், சமாதானத்தினாலும் நிரம்பி வழிந்திருக்கிறது. இந்த சந்தோஷம் பிறருக்கும் கிடைக்க வேண்டும், பிறகுக்கு சுவிசேஷம் அறிவிக்க வேண்டும் என்று அவர் உள்ளம் பற்றி எரிந்ததால், தனக்கு ஆண்டவரைப் பற்றி சொன்ன பரிசுத்தவானோடு இணைந்து ஊழியம் செய்யும்படி அவருடன் சேர்ந்து கொள்கிறார்.
மகரிஷியை ஆண்டவருக்குள் நடத்திய அந்த பரிசுத்தவான் பெயர் எர்னாஸ் (Yernaus). இவர் பரிசுத்த ஃப்ரான்சிஸ் சேவியரின் (St Francis Xavier 1506-1552) நெருங்கிய உறவினராவார்.எர்னாஸ் இரட்சிக்கப்பட்டவுடன் தன் மாமா ஃப்ரான்சிஸ் சேவியரைப் போல உலகமெங்கும் சென்று சுவிசேஷம் அறிவித்து வந்தார். இவர் இந்தியாவில் பல வருடங்கள் தங்கி ஊழியம் செய்தார். இவர் பேரரசர் அக்பர்(1556-1605), இன்னும் பல பெரிய மதத்தலைவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தார்.மன்னர் கான்ஸ்டாண்டைன் காலத்து கிரேக்க மொழியிலான தோல் சுருளில் எழுதப்பட்ட வேதம், ஃப்ரான்சிஸ் சேவியரிடமிருந்து, எர்னாஸுக்கு வந்து அவர் தன் கடைசிக் காலத்தில் தன் சீடனான மகரிஷிக்கு கொடுத்துச் சென்றார்.
எர்னாஸுடன் பல வருடங்கள் இணைந்து ஊழியம் செய்த மகரிஷியை, ஆவியானவரின் நடத்துதல் படி தனியே பிரிந்து போய் ஊழியம் செய்யும்படி குரு எர்னாஸ் வலியுறுத்த, அவரும் அப்படியே அடுத்த 75 வருடங்கள் பல ஊர், பல நாடுகள் சுற்றித் திரிந்து ஊழியம் செய்திருக்கிறார். அதனால் அவ்ருக்கு 21 மொழிகள் சரளமாக பேசத் தெரியும். 105 வயதானபோது, முன்போல் தீவிரமாக அலைந்து ஊழியம் செய்ய சரீரம் இடங்கொடுக்காததால், எஞ்சியுள்ள வாழ்நாட்களை ஓரிடத்தில் தங்கி ஜெபத்தில் கழிக்கலாம் என்று நினைத்து, அவர் ஊழியம் செய்யும்போது அவரை கவர்ந்த அழகான, அமைதியான கைலாய பர்வதம் (இமயமலை) ஞாபகம் வர அங்கே வந்து ஒரு குகையில் தங்கி அங்கிருக்கும் மூலிகைகள், கீரை, பழங்களைத் தின்று வாழ்ந்திருக்கிறார்.குளிர்காலத்தில் கரடிகள் குகைக்குவர இவரும் கரடிகளும் ஒன்றாய் படுத்துக்கொள்வார்களாம்! இப்படியே சில வருடங்கள் போக,எடுத்துக் கொள்ளும்படி ஆண்டவரை நோக்கித் தீவிரமாக ஜெபிக்க, ஒரு நாள் செட்டைகள் அடிக்கும் சத்தம் கேட்டிருக்கிறது. இவரது ஆன்மீகக் கண்கள் திறக்கப்ப்ட, பல தேவ தூதர்கள் இவர் இருந்த குகைக்கு இறங்கி வருவதைக் கண்டிருக்கிறார், பின்னால் இயேசு கிறிஸ்துவும் வந்திருக்கிறார். அவர் சொன்னது - 'மகனே, என் வருகை சீக்கிரத்தில் சம்பவிக்கப்போகிறது. அதுவரை நீ உலகத்தில்தான் இருக்க வேண்டும். உனக்கு மரணமில்லா சரீரம் இன்றிலிருந்து அளிக்கப்படுகிறது. பாவத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்ட இதயமும் கொடுக்கப்படும்.சரீரம் இங்கிருக்க ஆவியில் பூமியில் எங்கும் சென்று சபையின் நிலையறிந்து மக்களுக்காக மன்றாடுவதே உன் பணி' என்று சொல்லி ஆண்டவர் மறைந்து விடுகிறார். அன்றிலிருந்து இன்றுவரை மகரிஷி அந்த வேலைதான் செய்து வருகிறார்.
அவரது பெயர் என்ன என்று சாது சுந்தர் சிங் கேட்டதற்கு, ‘ முன்பு சாதாரன மனிதனாய் இருந்த போது எனக்கு ஒரு பெயர் இருந்தது. இப்ப SIN போய் SON முழுமையாக உள்ளிருப்பதால் என் பெயர் கிறிஸ்டியன் (Christian) ’ என்று சொன்னாராம்.
__________________
மரணத்தின் பின் சம்பவிப்பது என்ன? - கைலாச மகரிஷி.
இறந்தவுடன்(ஆவி/ஆத்துமா, சரீர பந்தம் துண்டிக்கப்பட்ட) சில நிமிடங்களுக்கு ஆவிக்கு இறந்து விட்டோம் (சரீரம் இறந்து விட்டது) என்று தெரியாமல்தான் இருக்கும். இறந்தும் உயிருடன் இருக்கும் இந்த புது அனுபவம் அதற்கு ஆச்சர்யத்தைக் கொடுக்கும். பின் அது இரட்சிக்கப்பட்ட நல்ல ஆத்துமாவாக இருந்தால் ஒளியுள்ள பாதையை தேரிந்தெடுக்கும். பாவியான கெட்ட ஆத்துமாவாக இருந்தால் இருளான பாதையை தானாக தேர்ந்த்தெடுக்கும். நல்ல ஆத்துமாக்களை தூதர்கள் அழைத்துக் கொண்டு போய் பரலோகில் விடுவார்கள். பாவியான பொல்லாத ஆத்துமாக்களை பொல்லாத ஆவிகள் இழுத்துக் கொண்டு போய் விடும். எல்லா ஆவிகளும் எங்கும் சுற்றித் திரிய அனுமதி இருக்கிறது. பரலோகில் இருக்கும் ஆவிகள் பூலோகம் வர பிரியப்படுகிறதில்லை. பூலோகின் பாவம் அவர்களால் சகித்துக் கொள்ள முடியாது.
சில வகையான ஆவிகள் எங்கும் போக அனுமதி கிடையாது. அவர்கள் ஒரு இடத்தில் தனியே வைக்கப்பட்டு போதிக்கப்பட்டு, பின் பரலோகம் போவார்கள். அவர்கள் யாரெனில்
1. சிறு பிள்ளைகள், குழந்தைகள் - பரலோக காரியங்களை புரிந்து கொள்ளும் வயது வருவதற்கு முன் மரித்தவர்கள்.
2. மன வளர்ச்சி அற்றவர்கள்/மன நோய் உள்ளவர்கள் - இயேசு கிறிஸ்துவைப் பற்றி சொன்னாலும் இவர்களுக்கு புரியாது.
3.ஊமை, குருடு, செவிடர்கள் - இப்படிப்பட்ட உடல் நலக் குறைபாட்டால், ஆண்டவரைப் பற்றி அறிந்து கொள்ளாத முடியாதவர்கள்.
4. ஒரு முறை கூட சுவிசெஷம் கேட்காதவர்கள்/ இயேசு கிறிஸ்துவுக்கு முன் வாழ்ந்தவர்கள் - இவர்கள் மேசியாவின் வருகைக்காக காத்திருந்த இடம் தான் பரதீசு. ஆபிரகாமின் மடி என்று அழைக்கப்படும் இடம். 1 பேதுரு 3 : 18-22 இல் சொல்லப்பட்ட காவலிலுள்ள ஆவிகள் இவர்களே. இவர்களுக்குத் தான் இயேசு கிறிஸ்து இரட்சிப்பின் செய்தியை சொல்லி, அங்கிருந்து மீட்டு பரலோகம் அனுப்பி வைத்தார்.
ஆங்கிலத்தில் காணொளியில் உள்ளது .
தமிழ் ஆக்கம் கத்தர் நல்லவர் வலை தளத்தில் இருந்தது எடுக்கப்பட்டது அதன் ஆசிரியருக்கு எனது நன்றி வாழ்த்துக்கள்
http://stalinwesley.blogspot.com/2011/11/blog-post_26.html
http://stalinwesley.blogspot.com/2011/11/blog-post_26.html
ஈழ தமிழர் விடயத்தில் மறைக்க பட்ட உண்மைகள் !
அண்மையில் எனது தளத்தில் நான் எழுதிய உலகின் சமாதனம் என்ன என்பது ஈழ தமிழர் விடயத்தில் நிரூபணம் ஆகின்றது. பதிவை வாசித்தவர்கள் நான் பதிவில் கோரியபடி '' இவ் வசனத்தின் இறுதில் உலகம் கொடுக்கிறபிரகாரம் நான்உங்களுக்குக் கொடுக்கிறதில்லை என்று ஜேசு அன்று கூறியது மிக சரியனதே. உலகின் சமாதனம் என்ன என்பது ஈழ தமிழர் விடயத்தில் நிரூபணம் ஆகின்றது. எனவே சமாதானத்தின் இறைவனிடம் ஈழ தமிழர் விடயத்தில் மறைக்க பட்ட உண்மைகள் வெளிவரவும் தமிழர்கள் மன விருப்பத்தின் படி நிலையான சமாதானம் கிடைக்க வேண்டுவோம் '' அனைவரும் செபித்தமைக்கு எனது நன்றி கத்தர் தங்களது செபத்தை கேட்டு இதுவரை இலங்கை தமிழர் விடயத்தில் மறைக்க பட்ட உண்மைகள் இன்று அறிக்கையாக வெளிவந்திருப்பது அனைவருக்கும் மகிழ்ச்சி. தொடர்ந்து ஈழ தமிழருக்காக செபித்து வாருங்கள்
கத்தருக்கு நன்றி தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்
கிறிஸ்தவர்களை உளவு பார்க்க சென்றவர்' தீர்க்கதரிசியானது எப்படி ?
கிறிஸ்தவர்களை உளவு பார்க்க சென்றவர்' தீர்க்கதரிசியானது எப்படி ?