உண்மையில் நாம் வாழும் காலம் இறுதி காலமா ?



 உண்மையில் நாம் வாழும் காலம் இறுதி காலமா ?நாம் இறுதி காலத்தில் வாழ்கிறோம் என்று எப்படி அறிந்து கொள்வது ?

2 தெசலோனிக்கேயர் 2

 2 ஒரு ஆவியினாலாவது, வார்த்தையினாலாவது, எங்களிடத்திலிருந்து வந்ததாய்த் தோன்றுகிற ஒரு நிருபத்தினாலாவது, கிறிஸ்துவினுடைய நாள் சமீபமாயிருக்கிறதாகச் சொல்லப்பட்டால், உடனே சஞ்சலப்படாமலும் கலங்காமலும் இருங்கள்.

3 எவ்விதத்தினாலும் ஒருவனும் உங்களை மோசம்போக்கதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் விசுவாச துரோகம் முந்தி நேரிட்டு, கேட்டின் மகனாகிய பாவமனுஷன் வெளிப்பட்டாலொழிய, அந்த நாள் வராது.
4 அவன் எதிர்த்துநிற்கிறவனாயும், தேவன் என்னப்படுவதெதுவோ, ஆராதிக்கப்படுவதெதுவோ, அவையெல்லாவற்றிற்கும் மேலாகத் தன்னை உயர்த்துகிறவனாயும், தேவனுடைய ஆலயத்தில் தேவன்போல உட்கார்ந்து, தன்னைத்தான் தேவனென்று காண்பிக்கிறவனாயும் இருப்பான். 
இவ் வசனத்தின் முதலில்   கேட்டின் மகனாகிய பாவமனுஷன்
வெளிப்படவேண்டும். அதற்காண  ஆயதங்கள் தற்பொழுது உலகத்தில் நடை பெற்றுக் கொண்டிருகிறது. The Satanic Bible 1969 இல் எழுத பட்டு அதற்கான ஆலயம் சின்னம் என்பன உள்ளது. இதில் வேடிக்கை என்ன வென்றால் இவர்களது சின்னம் யூதர்களின் நட்சத்திரதை கேலி  செய்வது  போல அமைத்து  இருகின்றனர் .உலகில் பல மதங்கள் உள்ளன ஏன்   யூதர்களின் நட்சத்திரதை போல அமைக்க வேண்டும் ? 
குறிப்பு ;( The Satanic Bible என google இல் தேடினால் காண முடியும்.)
காரணம் கண்க 
 நான் முந்தினவரும், நான் பிந்தினவருந்தானே, என்னைத் தவிர தேவன் இல்லையென்று இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தரும் சேனைகளின் கர்த்தராகிய அவனுடைய மீட்பரும் சொல்லுகிறார். (ஏசாயா 44:6)

இதில் இருந்து இஸ்ரவேலின் தெய்வமே உண்மை தெய்வம். எனவே அவருக்கு எதிரியான கேட்டின் மகனாகிய பாவமனுஷன் கத்தரால் தாவீது அரசருக்கு அருளப்பட்ட நட்சத்திர சின்னதை கேலி செய்வது போல அமைத்ததுடன் .மேலுள்ள வேத  வசனம் நிறைவேற தன்னைத்தான் தேவனென்று காண்பிக்க  தேவ  சின்னதை போல அமைத்தான் .காண்க (தேவன் என்னப்படுவதெதுவோ, ஆராதிக்கப்படுவதெதுவோ, அவையெல்லாவற்றிற்கும் மேலாகத் தன்னை உயர்த்துகிறவனாயும், தேவனுடைய ஆலயத்தில் தேவன்போல உட்கார்ந்து, தன்னைத்தான் தேவனென்று காண்பிக்கிறவனாயும் இருப்பான்)


எனவே நாம் இறுதிகாலத்தில் வாழ்கின்றோம் என உறுதியாக அறிந்து கொள்ளலாம்.
(உரோ.13:11)
11 நித்திரையைவிட்டு எழுந்திருக்கத்தக்க வேளையாயிற்றென்று, நாம் காலத்தை அறிந்தவர்களாய், இப்படி நடக்கவேண்டும்; நாம் விசுவாசிகளானபோது இரட்சிப்பு சமீபமாயிருந்ததைப் பார்க்கிலும் இப்பொழுது அது நமக்கு அதிக சமீபமாயிருக்கிறது.
12 இரவு சென்றுபோயிற்று, பகல் சமீபமாயிற்று; ஆகையால் அந்தகாரத்தின் கிரியைகளை நாம் தள்ளிவிட்டு, ஒளியின் ஆயுதங்களைத் தரித்துக்கொள்ளக்கடவோம்.
13 களியாட்டும் வெறியும், வேசித்தனமும் காமவிகாரமும், வாக்குவாதமும் பொறாமையும் உள்ளவர்களாய் நடவாமல், பகலிலே நடக்கிறவர்கள்போலச் சீராய் நடக்கக்கடவோம்.
14 துர்இச்சைகளுக்கு இடமாக உடலைப் பேணாமலிருந்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைத் தரித்துக்கொள்ளுங்கள்.  

தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்

0 comments:

Post a Comment