இந்த தொடரில் ஓரின சேர்க்கை பாவமும் அதில் உள்ள இரகசியம் என்ன? என்பதை விரிவாக எனக்கு தெரிந்த வகையில் ஆராய்கிறேன் . இந்த இரகிசியத்தை அறிந்துகொள்ள படைப்பின் தொடக்கத்தில் இருந்து தொடங்குவது சால சிறந்தது
ஆதியாகமம் 2 அதிகாரம் 18. பின்பு தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார்.
21. அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கு அயர்ந்த நித்திரையை வரப்பண்ணினார், அவன் நித்திரையடைந்தான்; அவர் அவன் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து, அந்த இடத்தைச் சதையினால் அடைத்தார்.
22. தேவனாகிய கர்த்தர் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டுவந்தார்.
23. அப்பொழுது ஆதாம்: இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள்; இவள் மனுஷனில் எடுக்கப்பட்டபடியினால் மனுஷி என்னப்படுவாள் என்றான்.
24. இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்.
இந்த வேத வசனத்தில் படைப்பின் தொடக்கத்தில் முதல் குடும்பத்தை தேவனே உருவாக்கினார். என்பதை அறிந்து கொள்ளலாம். ஆணில் இருந்து பெண் ? ஆதியில் தேவன் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான் என்பது படைப்பின் அடிப்படை கட்டளை.ஓரின சேர்க்கை பாவமாகிய ஆணுடன் ஆண் பெண்ணுடன் பெண் திருமணம் செய்வது என்பது
- 1) படைப்பின் அடிப்படை கட்டளையை மீறுவது
- 2) தேவனுடைய படைப்பை கேலிசெய்வது
3) தேவனுடைய படைப்புக்கு சவால் விடுவது
சாத்தானின் குணத்தை ஆண்டவரகிய இயேசு இப்படி சொன்னார் காணக (யோவான் 10: 10)
திருடனாகிய சாத்தான் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி
வேறொன்றுக்கும் வரான். நானோ ஆடுகளாகிய உங்களுக்கு ஜீவன்
உண்டாயிருக்கவும், நீங்கள் பரிபூரணப்படவும் வந்தேன் என்றார் இயேசு
கிறிஸ்து. இந்த வேத வசனத்தில் இருந்து சாத்தான் எப்போதும் மனிதர்களை கொல்லவும் அழிபதுமே அவனது வேலை என்பது தெளிவாகிறது .
ஓரின சேர்க்கை பாவத்தை செய்பவர்களது சின்னமான வானவில்லை வைத்ததின் மூலம் சாத்தான் மிக தந்திரமாக தேவனை கொண்டே மனிதனை கொல்ல வைக்கவும் தேவனை ஒரு மகா கொடியவராக மனிதர்களுக்கு சித்தரிப்பதே அவனது நோக்கம் . காண்க
ஆதியாகமம் 9
8 பிறகு தேவன் நோவாவிடமும் அவனது பிள்ளைகளிடமும், 9 “நான் உங்களோடும் உங்களுக்குப் பின்னுள்ள வாரிசுகளோடும், 10 உங்களோடு கப்பலிலே இருந்த பறவைகளோடும் மிருகங்களோடும் ஊர்வனவற்றோடும் பூமியில் உள்ள அனைத்து உயிர்களோடும் எனது உடன்படிக்கையை ஏற்படுத்திக்கொள்கிறேன். 11 வெள்ளப்பெருக்கால் பூமியில் உள்ள அனைத்து உயிர்களும் அழிக்கப்பட்டன. ஆனால் மீண்டும் இது போல் நடைபெறாது. இன்னொரு வெள்ளப் பெருக்கு பூமியில் உள்ள உயிர்களை அழிக்காது” என்றார்.
12 மேலும் தேவன், “உங்களுக்குக் கொடுத்த வாக்குறுதிக்கு அடையாளமாக ஒன்றை உங்களுக்குத் தருகிறேன். உன்னோடும் பூமியில் வாழும் ஒவ்வொரு உயிரோடும் நான் செய்துகொண்ட உடன்படிக்கைக்கு அது அத்தாட்சியாக இருக்கும். இந்த உடன்படிக்கை இனிவரும் எல்லாக் காலத்துக்கும் உரியதாக இருக்கும். இதுவே அந்த அத்தாட்சி. 13 மேகங்களுக்கு இடையே ஒரு வானவில்லை உருவாக்கி உள்ளேன். எனக்கும் பூமிக்குமான உடன்படிக்கைக்கு இதுவே அத்தாட்சி. 14 பூமிக்கு மேலாய் மேகங்களைக் கொண்டு வரும்போதெல்லாம் நீங்கள் அதில் வானவில்லைப் பார்க்கலாம். 15 வானவில்லைப் பார்க்கும்போதெல்லாம் நான் எனக்கும் உங்களுக்கும் மற்ற உயிர்களுக்கும் இடையில் ஏற்படுத்திக்கொண்ட உடன்படிக்கையை நினைத்துக்கொள்வேன். அந்த உடன்படிக்கை இனி ஒரு வெள்ளப் பெருக்கு உலகில் தோன்றி இங்குள்ள உயிர்களை அழிக்காது என்று கூறுகிறது. 16 மேகங்களுக்கிடையில் நான் வானவில்லைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கும் பூமியின் மீதுள்ள அனைத்து உயிர்களுக்குமிடையிலான நிரந்தரமான உடன்படிக்கையை நினைத்துக்கொள்வேன்.”
17 “நான் பூமியில் உள்ள அனைத்து உயிர்களோடும் செய்துகொண்ட உடன்படிக்கைக்கு அத்தாட்சியாக வானவில் விளங்குகிறது” என்றார்.
ஆகவே வானவில் என்பது இனி நீரினால் பூமியை அழிக்க மாட்டேன் என்று நோவாவிற்கு தேவனால் வழங்க பட்ட உடன்படிக்கையின் அத்தாட்சியாக இருக்கிறது தேவன் அறவே வெறுக்கும் ,தேவனுடைய படைப்பின் அடிப்படை கட்டளையை மீறும் பாவமாகிய ஓரின சேர்க்கை ஆணுடன் ஆண் பெண்ணுடன் பெண் திருமணம் செய்வது போன்ற அருவருப்பிற்கு இனி நீரினால் பூமியை அழிக்க மாட்டேன் என்று நோவாவிற்கு தேவனால் வழங்கபட்ட உடன்படிக்கையின் அத்தாட்சியாக இருக்கிற வானவில்லை சின்ன மாக வைத்ததன் மூலம் சாத்தான் தனது நோக்கமாகிய மனிதர்களை கொல்லவும், மனிதர்களை அழிக்கவும்,நோவாவுடன் தேவன் செய்த உடன்படிக்கையை தேவன் மீற வேண்டிய இக்கட்டு நிலைக்கு தந்திராமாக மனிதர்களை கொண்டே தேவனை சிக்க வைக்கும் மகா தந்திரம்
தற்போது இந்த பாவம் காட்டு தீ போல வேகமாக பரவி வருவதன் இரகசியம் என்ன ?
நாம் வாழும் இந்த நாட்கள் பூமியின் இறுதி காலம் ,கலியுகம் வேதாகமம் முன்னுரைப்பதன்படி அனைத்து அருவருப்பபுகளுக்கும் அழிவிற்கும் தலைவனாகிய சாத்தான் மனித அவதாரம் எடுத்து 7 ஆண்டுகள் பூமியை ஆளுகை செய்யும் காலம் மிக சமீபமாக உள்ளது .அவன் வெளிப்படும் முன்னர் இந்த பாவத்தை உலகம் முழுவதும் பரப்பி மனிதருக்கும் தேவனுக்கும் உள்ள உடன்படிக்கையை மனிதர்களை கொண்டே மீற வைத்து மனிதருக்கும் தேவனுக்கும் உறவை முதலில் உடைத்து பின்னர் தனது பரிபூரண கடுபாட்டிற்குள் மனிதர்களை உட்படுத்தி நான் மேலே உள்ள பந்தியில் சொன்னது போல தேவனை கொண்டே மனிதனை கொல்ல வைக்கவும் தேவனை ஒரு மகா கொடியவராக மனிதர்களுக்கு சித்தரிப்பதே அவனது நோக்கம்
காண்க வெளி16 அதிகாரம்.9. அப்பொழுது மனுஷர்கள் மிகுந்த உஷ்ணத்தினாலே தகிக்கப்பட்டு, இந்த வாதைகளைச் செய்ய அதிகாரமுள்ள தேவனுடைய நாமத்தைத் தூஷித்தார்களேயல்லாமல், அவரை மகிமைப்படுத்த மனந்திரும்பவில்லை
பின்னர் சாத்தானது நீண்ட நாள் ஆசையான தன்னை தேவனாக மனிதர்களை வணங்க வைப்பதே அவனது திட்டம்
காண்க வெளி13 அதிகாரம்
- 12. அது முந்தின மிருகத்தின் அதிகாரம் முழுவதையும் அதின் முன்பாக நடப்பித்து, சாவுக்கேதுவான காயம் ஆறச்சொஸ்தமடைந்த முந்தின மிருகத்தைப் பூமியும் அதின் குடிகளும் வணங்கும்படி செய்தது.
13. அன்றியும், அது மனுஷருக்குமுன்பாக வானத்திலிருந்து பூமியின்மேல் அக்கினியை இறங்கப்பண்ணத்தக்கதாகப் பெரிய அற்புதங்களை நடப்பித்து,
14. மிருகத்தின்முன்பாக அந்த அற்புதங்களைச் செய்யும்படி தனக்குக் கொடுக்கப்பட்ட சத்துவத்தினாலே பூமியின் குடிகளை மோசம்போக்கி, பட்டயத்தினாலே காயப்பட்டுப் பிழைத்த மிருகத்திற்கு ஒரு சொரூபம் பண்ணவேண்டுமென்று பூமியின் குடிகளுக்குச் சொல்லிற்று.
15. மேலும் அம்மிருகத்தின் சொரூபம் பேசத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்தை வணங்காத யாவரையும் கொலைசெய்யத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்திற்கு ஆவியைக் கொடுக்கும்படி அதற்குச் சத்துவங்கொடுக்கப்பட்டது.
16. அது சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர், சுயாதீனர், அடிமைகள், இவர்கள் யாவரும் தங்கள் தங்கள் வலதுகைகளிலாவது நெற்றிகளிலாவது ஒரு முத்திரையைப் பெறும்படிக்கும்,
17. அந்த மிருகத்தின் முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக்கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங் கூடாதபடிக்கும் செய்தது.
தெசலோனிக்கேயர் 2
எனவே நாம் இறுதிகாலத்தில் வாழ்கின்றோம் என உறுதியாக அறிந்து கொள்ளலாம்.
(உரோ.13:11)
11 நித்திரையைவிட்டு எழுந்திருக்கத்தக்க வேளையாயிற்றென்று, நாம் காலத்தை அறிந்தவர்களாய், இப்படி நடக்கவேண்டும்; நாம் விசுவாசிகளானபோது இரட்சிப்பு சமீபமாயிருந்ததைப் பார்க்கிலும் இப்பொழுது அது நமக்கு அதிக சமீபமாயிருக்கிறது.
(உரோ.13:11)
11 நித்திரையைவிட்டு எழுந்திருக்கத்தக்க வேளையாயிற்றென்று, நாம் காலத்தை அறிந்தவர்களாய், இப்படி நடக்கவேண்டும்; நாம் விசுவாசிகளானபோது இரட்சிப்பு சமீபமாயிருந்ததைப் பார்க்கிலும் இப்பொழுது அது நமக்கு அதிக சமீபமாயிருக்கிறது.
12 இரவு சென்றுபோயிற்று, பகல் சமீபமாயிற்று; ஆகையால் அந்தகாரத்தின் கிரியைகளை நாம் தள்ளிவிட்டு, ஒளியின் ஆயுதங்களைத் தரித்துக்கொள்ளக்கடவோம்.
13 களியாட்டும் வெறியும், வேசித்தனமும் காமவிகாரமும், வாக்குவாதமும் பொறாமையும் உள்ளவர்களாய் நடவாமல், பகலிலே நடக்கிறவர்கள்போலச் சீராய் நடக்கக்கடவோம்.
14 துர்இச்சைகளுக்கு இடமாக உடலைப் பேணாமலிருந்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைத் தரித்துக்கொள்ளுங்கள்.
13 களியாட்டும் வெறியும், வேசித்தனமும் காமவிகாரமும், வாக்குவாதமும் பொறாமையும் உள்ளவர்களாய் நடவாமல், பகலிலே நடக்கிறவர்கள்போலச் சீராய் நடக்கக்கடவோம்.
14 துர்இச்சைகளுக்கு இடமாக உடலைப் பேணாமலிருந்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைத் தரித்துக்கொள்ளுங்கள்.
- 6. பின்பு, வேறொரு தூதன் வானத்தின் மத்தியிலே பறக்கக்கண்டேன்; அவன் பூமியில் வாசம்பண்ணுகிற சகல ஜாதிகளுக்கும், கோத்திரத்தாருக்கும், பாஷைக்காரருக்கும், ஜனக்கூட்டத்தாருக்கும் அறிவிக்கத்தக்கதாக நித்திய சுவிசேஷத்தை உடையவனாயிருந்து,
7. மிகுந்த சத்தமிட்டு: தேவனுக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத்துங்கள்; அவர் நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் வேளை வந்தது; வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் நீரூற்றுகளையும் உண்டாக்கினவரையே தொழுதுகொள்ளுங்களென்று கூறினான்.
தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்
0 comments:
Post a Comment