இலங்கை பிரச்சனையை யார் தான் நீதி வழுவாமல் கையாளகூடியவர் ? பாகம் 02

காலத்தின் தேவை கருதி இந்த பதிவு மறு பதிவாகிறது  இந்த பதிவில் சொல்ல பட்டத்தின் படி  இலங்கை  பிரச்சனைக்காக    நிதிவேண்டி செபித்த  ஒவ்வொரு தமிழ் கிறிஸ்த்தவர்களுக்கும் எனது இதயம் நிறைந்த நன்றிகள். தங்களது செபத்தை கேட்ட இறைவன் இலங்கை பிரச்சனைக்கு கத்தர் நீதி வழங்க தொடங்கி விட்டார் பெருமை பேசி தமிழரை வெறிகொண்டு அழித்ததுடன் எப்போதும் சிங்கள அரசை தாங்கியவர்களை தேவன் கடந்த தேர்தலில் கருவறுத்து  விட்டார் .பல தடைகளை தாண்டி சர்வதேச விசாரணை குழுவும் அமைக்கபட்டு விட்டது உங்களது செபத்தை கேட்டு பதில் தந்தமைக்காக தேவனுக்கு கோடான கோடி  ஸ்தோத்திரம். ஆட்சி  மாறினாலும் அதே  சுப்பிரமணிய சுவாமி போன்றோரை இலங்கைக்கு அனுப்பி வருவது மாறவில்லை எனவே என்றும் நீதி மாறாத அந்த உண்மை இறைவனிடம் நடந்த கொலைகளுக்கா நிதிவேண்டி செபிப்பது ஒவ்வொரு தமிழ் கிறிஸ்த்தவர்களுக்கும் காலம் இட்ட பணி. இலங்கை கிறிஸ்தவர்கள் தொடர்பாக எனது இன்னொரு பதிவு வாசிக்க இங்கே தேவனுடைய கோபம் வெளிப்பட என்ன காரணம் ???
ஒவ்வொரு தமிழனின் மனதிலும் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவின் தீர்மானத்திற்கு இந்தியாவின் பதில் என்ன? என்ற எதிர்பார்ப்பு நிறைந்ததாக உள்ளது .வழமைபோலவே காங்கிரஸ் இலங்கை எமது நட்பு நாடு என்று சொல்கிறார் .அத்துடன் சுப்பிரமணிய சுவாமி போன்றோரை இலங்கைக்கு அனுப்பி தமிழருக்கு எதிராக இரகசிய சதியை செய்துள்ளது இறைய காங்கிரஸ் அரசு .
                                  இலங்கை பிரச்சனையில் எந்த ஒரு நாடும் இதய சுத்தியுடன் நீதியின் வழி நின்று பிரச்னையை கையாளவில்லை என்பது வெளிப்படை உண்மை .காண்க உலகின் சமாதனம் என்ன என்பது இலங்கை தமிழர் விடயத்தில் நிரூபணம் ஆகின்றது.இந்  நிலையில் யார் தான் நீதி வழுவாமல் பிரச்னையை கையாளகூடியவர் ?  கத்தராகிய இயேசு கிறிஸ்து மட்டுமே .
          இரண்டு  தனி மனிதன் கொல்லபட்டத்துக்கு  நீதி வழங்க தேவன் இறங்கி வந்து நீதியை வழங்கிய  இரண்டு  சம்பவங்களை தருகிறேன்.


1) காயின்  ஆபேலை கொன்றது 
காண்க 



தொடக்கநூல்
அதிகாரம் 4.
6.    ஆகவே, ஆண்டவர் காயினிடம், "நீ ஏன் சினமுற்றிருக்கிறாய்? உன் முகம் வாடி இருப்பது ஏன்?
7.    நீ நல்லது செய்தால் உயர்வடைவாய் அல்லவா? நீ நல்லது செய்யாவிட்டால், பாவம் உன்மேல் வேட்கை கொண்டு உன் வாயிலில் படுத்திருக்கும். நீ அதை அடங்கி ஆளவேண்டும்" என்றார்.
8.    காயின் தன் சகோதரன் ஆபேலிடம், "நாம் வயல்வெளிக்குப் போவோம்" என்றான். அவர்கள் வெளியில் இருந்தபொழுது, காயின் தன் சகோதரன் ஆபேலின் மேல் பாய்ந்து அவனைக் கொன்றான். 
9.    ஆண்டவர் காயினிடம், "உன் சகோதரன் ஆபேல் எங்கே?" என்று கேட்டார். அதற்கு அவன், "எனக்குத் தெரியாது. நான் என்ன, என் சகோதரனுக்குக் காவலாளியோ?" என்றான்.
10.   அதற்கு ஆண்டவர், "நீ என்ன செய்துவிட்டாய்! உன் சகோதரனின் இரத்தத்தின் குரல் மண்ணிலிருந்து என்னை நோக்கிக் கதறிக் கொண்டிருக்கிறது. 
11.   இப்பொழுது, உன் கைகள் சிந்திய உன் சகோதரனின் இரத்தத்தைத் தன் வாய்திறந்து குடித்த மண்ணை முன்னிட்டு, நீ சபிக்கப்பட்டிருக்கின்றாய்.
12.   நீ மண்ணில் பயிரிடும் பொழுது அது இனிமேல் உனக்குப் பலன் தராது. மண்ணுலகில் நீ நாடோடியாக அலைந்து திரிவாய்" என்றார்.
13.   காயின் ஆண்டவரிடம், "எனக்குக் கொடுக்கப்பட்ட தண்டனை என்னால் தாங்க முடியாததாக இருக்கின்றது. 


2) தாவீது அரசன் உரியாவின் மனைவி மீது இச்சை கொண்டு அவளை தனது மனைவி ஆக அடைய போர் தர்மத்தை மீறி சதி செய்து உரியாவை 
கொன்றது .
காயின்  ஆபேலை கொன்றது படைப்பின்  தொடக்கத்தில் தேவன் ஆபேல் 
கொலைக்கு  நீதி வழங்கியதை பார்த்தோம் .ஆபேல் கொலை நடந்து  ஆயிரம் ஆண்டுகட்கு பின்னர் தாவீது அரசன் உரியாவை 
கொன்றது . வருகின்றது.
                                             தாவீது ஒரு சாதாரண மனிதன் அல்ல இஸ்ரவேலின்
அரசன் இதைவிட தேவனின் செல்ல பிள்ளை .இந்த சந்தர்பத்தில் இன்றைய இந்திய அரசு  கூறுவது போல(( இலங்கை எமது நட்பு நாடு எனவே இலங்கை செய்வதை காங்கிரசை போல கண்டுகொள்லாமல் இருக்க பழகுங்கள் என்று தமிழ் நாட்டை வற்புறுத்தி வருகின்றது. .))இதே போல 
தாவீது ஒரு சாதாரண மனிதன் அல்ல இஸ்ரவேலின் 
அரசன் அதைவிட எனக்கு மிகவும் பிரியமான மகன் நடந்த கொலை எனக்கு மட்டுமே தெரியும்  எனவே நான் இதை கண்டு கொள்ளாமல் இருப்பேன் என்று தேவன் எச் சந்தர்பத்திலும் சொல்லவும் இல்லை அதற்காக தாவீதை நீதி விசாரிக்காமல் இருக்கவும் இல்லை .  இச்சம்பவம் நமது தேவன் என்றென்றும் மாறாத தேவன் என்பதையும் அவர் எப்போதும் நீதியை நிலை நாடுகின்றார் என்பதற்க்கு வலுவான சாட்சி .
காண்க



10. உரியா தன் வீட்டிற்குப் போகவில்லையென்று தாவீதுக்கு அறிவிக்கப்பட்டபோது, தாவீது உரியாவை நோக்கி: நீ பயணத்திலிருந்து வந்தவன் அல்லவா, நீ உன் வீட்டிற்குப் போகாதிருக்கிறது என்ன என்று கேட்டான்.

11. உரியா தாவீதை நோக்கி: பெட்டியும் இஸ்ரவேலும் யூதாவும் கூடாரங்களிலே தங்கி, என் ஆண்டவனாகிய யோவாபும், என் ஆண்டவனின் சேவகரும் வெளியிலே பாளயமிறங்கியிருக்கையில், நான் புசிக்கிறதற்கும், குடிக்கிறதற்கும், என் மனைவியோடே சயனிக்கிறதற்கும், என் வீட்டுக்குள் பிரவேசிப்பேனோ? நான் அப்படிச் செய்கிறதில்லை என்று உம்முடைய பேரிலும் உம்முடைய ஆத்துமாவின்பேரிலும் ஆணையிட்டுச் சொல்லுகிறேன் என்றான்.

12. அப்பொழுது தாவீது உரியாவை நோக்கி: இன்றைக்கும் நீ இங்கேயிரு; நாளைக்கு உன்னை அனுப்பிவிடுவேன் என்றான்; அப்படியே உரியா அன்றும் மறுநாளும் எருசலேமில் இருந்தான்.

13. தாவீது அவனைத் தனக்கு முன்பாகப் புசித்துக் குடிக்கிறதற்கு அழைத்து, அவனை வெறிக்கப்பண்ணினான்; ஆனாலும் அவன் தன் வீட்டுக்குப் போகாமல், சாயங்காலத்திலே தன் ஆண்டவனின் சேவகரோடே தன் படுக்கையிலே படுத்துக்கொண்டான்.

14. காலமே தாவீது யோவாபுக்கு ஒரு நிருபத்தை எழுதி, உரியாவின் கையில் கொடுத்து அனுப்பினான்.

15. அந்த நிருபத்திலே: மும்முரமாய் நடக்கிற போர்முகத்திலே நீங்கள் உரியாவை நிறுத்தி, அவன் வெட்டுண்டு சாகும்படிக்கு, அவனை விட்டுப் பின்வாங்குங்கள் என்று எழுதியிருந்தான்.

16. அப்படியே யோவாப் அந்தப் பட்டணத்தைச் சூழக் காவல்போட்டிருக்கையில் பராக்கிரமசாலிகள் இருக்கிறார்கள் என்று தான் அறிந்த இடத்தில் உரியாவை நிறுத்தினான்.

17. பட்டணத்து மனுஷர் புறப்பட்டுவந்து யோவாபோடே யுத்தம்பண்ணுகையில், தாவீதின் சேவகராகிய ஜனத்தில் சிலர் பட்டார்கள்; ஏத்தியனாகிய உரியாவும் செத்தான்.

26. தன் புருஷனாகிய உரியா செத்தான் என்று அவன் மனைவி கேள்விப்பட்டபோது, அவள் தன் நாயகனுக்காக இழவு கொண்டாடினாள்.

27. துக்கநாள் சென்றபின்பு, தாவீது அவளை அழைத்தனுப்பி, தன் வீட்டிலே சேர்த்துக்கொண்டான்; அவள் அவனுக்கு மனைவியாகி அவனுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள். தாவீது செய்த இந்தக் காரியம் கர்த்தரின்பார்வைக்குப் பொல்லாததாயிருந்தது.
                            
                            II சாமுவேல்12 அதிகாரம்

1. கர்த்தர் நாத்தானைத் தாவீதினிடத்தில் அனுப்பினார்; இவன் அவனிடத்தில் வந்து, அவனை நோக்கி: ஒரு பட்டணத்தில் இரண்டு மனுஷர் இருந்தார்கள்; ஒருவன் ஐசுவரியவான், மற்றவன் தரித்திரன்.


2. ஐசுவரியவானுக்கு ஆடுமாடுகள் வெகு திரளாயிருந்தது.

3. தரித்திரனுக்கோ தான் கொண்டு வளர்த்த ஒரே ஒரு சின்ன ஆட்டுக்குட்டியைத்தவிர வேறொன்றும் இல்லாதிருந்தது; அது அவனோடும் அவன் பிள்ளைகளோடுங்கூட இருந்து வளர்ந்து, அவன் வாயின் அப்பத்தைத் தின்று, அவன் பாத்திரத்திலே குடித்து, அவன் மடியிலே படுத்துக்கொண்டு, அவனுக்கு ஒரு மகளைப்போல இருந்தது.

4. அந்த ஐசுவரியவானிடத்தில் வழிப்போக்கன் ஒருவன் வந்தான்; அவன் தன்னிடத்தில் வந்த வழிப்போக்கனுக்குச் சமையல் பண்ணுவிக்க, தன்னுடைய ஆடுமாடுகளில் ஒன்றைப் பிடிக்க மனதில்லாமல், அந்தத் தரித்திரனுடைய ஆட்டுக்குட்டியைப் பிடித்து, அதைத் தன்னிடத்தில் வந்த மனுஷனுக்குச் சமையல்பண்ணுவித்தான் என்றான்.

5. அப்பொழுது தாவீது: அந்த மனுஷன்மேல் மிகவும் கோபமூண்டவனாகி, நாத்தானைப் பார்த்து: இந்தக் காரியத்தைச் செய்த மனுஷன் மரணத்திற்குப்பாத்திரன் என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்.

6. அவன் இரக்கமற்றவனாயிருந்து, இந்தக் காரியத்தைச் செய்தபடியினால், அந்த ஆட்டுக்குட்டிக்காக நாலத்தனை திரும்பச் செலுத்தவேண்டும் என்றான்.

7. அப்பொழுது நாத்தான் தாவீதை நோக்கி: நீயே அந்த மனுஷன்; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர்சொல்லுகிறது, என்னவென்றால், நான் உன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணி, உன்னைச் சவுலின் கைக்குத் தப்புவித்து,

8. உன் ஆண்டவனுடைய வீட்டை உனக்குக் கொடுத்து, உன் ஆண்டவனுடைய ஸ்திரீகளையும் உன் மடியிலே தந்து, இஸ்ரவேல் வம்சத்தையும், யூதா வம்சத்தையும் உனக்குக் கையளித்தேன்; இது போதாதிருந்தால், இன்னும் உனக்கு வேண்டியதைத் தருவேன்.

9. கர்த்தருடைய பார்வைக்குப் பொல்லாப்பான இந்தக் காரியத்தைச் செய்து, அவருடைய வார்த்தையை நீ அசட்டை பண்ணினது என்ன? ஏத்தியனாகிய உரியாவை நீ பட்டயத்தால் மடிவித்து, அவன் மனைவியை உனக்கு மனைவியாக எடுத்துக்கொண்டு, அவனை அம்மோன் புத்திரரின் பட்டயத்தாலே கொன்றுபோட்டாய்.

10. இப்போதும் நீ என்னை அசட்டைபண்ணி, ஏத்தியனாகிய உரியாவின் மனைவியை உனக்கு மனைவியாக எடுத்துக்கொண்டபடியினால், பட்டயம் என்றைக்கும் உன் வீட்டைவிட்டு விலகாதிருக்கும்.

11. கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், இதோ, நான் உன் வீட்டிலே பொல்லாப்பை உன்மேல் எழும்பப்பண்ணி, உன் கண்கள் பார்க்க, உன் ஸ்திரீகளை எடுத்து, உனக்கு அடுத்தவனுக்குக் கொடுப்பேன்; அவன் இந்தச் சூரியனுடைய வெளிச்சத்திலே உன் ஸ்திரீகளோடே சயனிப்பான்.


12. நீ ஒளிப்பிடத்தில் அதைச் செய்தாய்; நானோ இந்தக் காரியத்தை இஸ்ரவேலர் எல்லாருக்கு முன்பாகவும், சூரியனுக்கு முன்பாகவும் செய்விப்பேன் என்றார் என்று சொன்னான்.


13. அப்பொழுது தாவீது நாத்தானிடத்தில்: நான் கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தேன் என்றான். நாத்தான் தாவீதை நோக்கி: நீ சாகாதபடிக்கு, கர்த்தர் உன் பாவம் நீங்கச்செய்தார்.


14. ஆனாலும் இந்தக் காரியத்தினாலே கர்த்தருடைய சத்துருக்கள் தூஷிக்க நீ காரணமாயிருந்தபடியினால், உனக்குப் பிறந்த பிள்ளை நிச்சயமாய் சாகும் என்று சொல்லி, நாத்தான் தன் வீட்டுக்குப்போய்விட்டான்.



15. அப்பொழுது கர்த்தர் உரியாவின் மனைவி தாவீதுக்குப் பெற்ற ஆண்பிள்ளையை அடித்தார்; அது வியாதிப்பட்டுக் கேவலமாயிருந்தது.


எனவே என்றும் நீதி மாறாத அந்த உண்மை இறைவனிடம் நடந்த கொலைகளுக்கா நிதிவேண்டி செபிப்பது ஒவ்வொரு தமிழ் கிறிஸ்த்தவர்களுக்கும் காலம் இட்ட பணி இதை நிறைவேற்றும்  போது கண்டிப்பாக தேவன் வாருவார். இலங்கை தமிழருக்கு  நீதி வழங்குவார் .இதை உலகில் உள்ள எந்த அரசாலும் தடுக்கமுடியாது .என்னெனில் நம் தேவன்  நமது தேவன் என்றென்றும் மாறாத தேவன் என்பதையும் அவர் எப்போதும் நீதியை நிலை நாடுகின்றார் 
தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்
உன்னைக் காக்கும் தேவன் தூங்குவதுமில்லை, அயர்வதுமில்லை.
Continue Reading →

இஸ்ரேல் சிறப்பு கண்ணோட்டம்

இஸ்ரேல் வரலாறு அதன் தனித்துவம்  சிறப்பு  கண்ணோட்டம் 
Continue Reading →

உந்தன் உயிரிலும் மேலாக என்னை நேசிக்கும் எனதருமை தகப்பனே



உந்தன் உயிரிலும் மேலாக
என்னை நேசிக்கும் எனதருமை தகப்பனே
உந்தன் கிருபையினால் இந்த பாக்கியம் பெற்றேன்

எத்தனை நன்றி சொல்லி துதித்தாலும்
உம் அன்புக்கு ஈடாகுமா
உந்தன் கிருபையினால் இந்த பாக்கியம் பெற்றேன்

இடி என இன்னல்கள் வந்தாலும்
வெண்பனி போல் மாற்றீனீரே
உந்தன் கிருபையினால் இந்த பாக்கியம் பெற்றேன்

எத்தனை பேர் என்னை ஏமாற்றினாலும்
நீர் என்னை ஆசீர்வதித்தீர்
உந்தன் கிருபையினால் இந்த பாக்கியம் பெற்றேன்

எந்தன் உயிரை கொல்ல தேடியபோது
உந்தன் சிறகுகளில்  மறைத்து  காத்தீரே
உந்தன் கிருபையினால் இந்த பாக்கியம் பெற்றேன்

அந்நிய நாட்டில் அகதியாய் வாழ்ந்தேன்
நீர் எனக்கு  அடைக்கலமே
உந்தன் கிருபையினால் இந்த பாக்கியம் பெற்றேன்
Continue Reading →

இஸ்ரவேல் தேவனுடைய வாக்கும் இஸ்ரேல் நாட்டின் போக்கும்

நவீன இஸ்ரேல் நாடு 60 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்டது. 1948_ம் ஆண்டு மே மாதம் 14_ம் நாள் டேவிட் பென்குரியான் இஸ்ரேல் நாட்டை சுதந்திர நாடாய் அறிவித்தார். யூதர்கள் மற்றும் அவர்களின் தேசம் அற்புதமாய்த் தோன்றி நிலைப்பதை நாம் நமது சொந்தக் கண்களால் காண்கிறோம்.

" ஒரு தேசத்திக்கு ஒரே நாளில் பிள்ளைப்பேறு வருமோ? ஒரு ஜாதி ஒருமிக்க பிறக்குமோ?" என்று ஏசாயா 66:8_8 உள்ள தீர்க்க தரிசனத்தின் நிறைவேறுதலாகும் இது.

இஸ்ரேல் தேசத்தின் சுதந்திரத்திற்குப் பின் முதல் 3 ஆண்டுகளில் யூதர்களின் ஜனத்தொகை இரட்டிப்பானது. 100 நாடுகளுக்கும் மேலான தேசங்களிலின்று மக்கள் வந்து ஒற்றுமையாய் வாழவது பிரமிப்பைத்தரும் ஒன்றாகும். 60 ஆண்டுகளுக்கு முன் பாலஸ்தீனாவில் 6,00,000_கும் குறைவான யூதர்காளே வாழ்ந்தனர். இன்று இஸ்ரேல் நாட்டின் முழு ஜனத்தொகை 70 இலட்சத்திற்கும் மேல் இஸ்ரேல் நாடு ஊடகங்களின் கவனத்தை வெகுவாய் தன் பக்கம் ஈர்ப்பதனால் உலகில் உள்ள நாடிகளில் பெரிதாய் கணிக்கப்படுகிறது. இஸ்ரேல் மக்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பான எல்லைகளைக் குறித்துப் பேசும் போது, அவர்கள் எந்தப் பொருளில் சொல்லுகிறார்கள் என்பதை இஸ்ரேலின் பூகோள அமைப்பை நீங்கள் ஒருமுறை பார்த்தால் எளிதில் அறிந்துகொள்ளலாம்.
இஸ்ரேல் நாட்டின் ம‌த்திய‌ ப‌குதியின் 9 மைல் குறுக்க‌ள‌வை ச‌ற்று ம‌ற‌ந்து விடுங்க‌ள். நீங்க‌ள் எருச‌லேம் சென்றால், யூத‌ர்க‌ளுக்கும் அர‌பிய‌ர்களுக்கும் இடையில் சிறிது தூர‌மே இருப்ப‌தைக் காண‌லாம். எருச‌லேமில் ப‌ரிசுத்த‌ ஸ்த‌ல‌மாகிய‌ மேற்கு ம‌திலின் மீதும், தேவால‌ய‌ ம‌லையின் மீதும் " டோம் ஆஃப் த‌ ராக்" என‌ப்ப‌டும் பாறை ம‌ண்ட‌ப‌மும், அல் - அக்ச‌ர் ம‌சூதியும் அமைன்துள்ள‌ன‌, சுற்றிவரும் முனையில் ந‌ன்கு அறிந்த‌ ப‌ரிசுத்த‌ க‌ல்ல‌ரையின் தேவ‌ல‌ய‌ம் உள்ள‌து. நீங்க‌ள் எப்ப‌டி யூத‌ர்க‌ளுக்கும், அர‌பியர்க‌ளுக்கும் கிறிஸ்த‌வ‌ர்க‌ளுக்கும் முக‌ம‌திய‌ருக்கும் கோடிட்டு பிரித்துக் காட்ட‌விய‌லும்?

அனைத்து அர‌பு நாடுக‌ளையும் சேர்த்தால், ப‌ர‌ப்ப‌ள‌வில் இஸ்ரேல் நாட்டின் அள‌வைப்போல் அது 650 ம‌ட‌ங்கு பெரிய‌தாகும். பூகோள‌ ரீதியாக‌ குறிப்பாக‌ அர‌பு நாடுக‌ளின் மிக‌ப்பெரிய‌ ப‌ர‌ப்ப‌ள‌வை ஒப்பிட்டால் இஸ்ரேல் நாடு மிக‌வும் சின்ன‌ நாடு. இருப்பினும் யூத‌ர்க‌ளின் தேச‌ம், சில‌ நாடுக‌ளின் ப‌ய‌முறுத்த‌லுக்கும், ப‌கையான‌ க‌ண்ட‌ன‌த்திற்கும் ஓயாத‌ இல‌க்காய் இருந்து கொண்டிருக்கிற‌து. ம‌னித‌ வ‌ர‌லாற்றின் துவ‌க்க‌ம் முத‌ற்கொண்டே, யூத‌ ம‌க்க‌ள் தாங்க‌ள் உயிர்வாழ‌வே அச்சுருத்த‌ல்க‌ளை எதிர்கொண்ட‌ன‌ர். ஆனால் ச‌ர்வ‌ வ‌ல்ல‌மையுள்ள‌ தேவ‌னின் கிருபையால் அவ‌ற்றை அவ‌ர்க‌ள் மேற்கொண்ட‌ன‌ர். இன்று இஸ்ரேல் நாடு உல‌கின் அனைத்து நாடுக‌ளிலும் அது நிலைத்திருப்ப‌தின் உரிமை விவாதிக்க‌ப்ப‌ட்டு, அத‌ன் எதிர்கால‌ம் கேள்விக்குறியாயிருக்கிற‌ ஒரே நாடாக‌ ஒருவேளை இருக்க‌லாம். ஏன் அநேக‌மாக‌ உல‌க‌ம‌னைத்தும் யூத‌ர்க‌ளை வெறுக்கிறது? யூத‌ர்க‌ள் உல‌கிற்கு என்ன‌ செய்து விட்டார்க‌ள்? இஸ்ரேல் நாடு நிலைக்குமா? அநேக‌ ம‌க்க‌ளுக்கு, முழு த‌க‌ராறும் பூகோள‌ ரீதிய‌ன‌து போல் தோண்றுகிற‌து ஒரு துண்டு நில‌த்தை யூதரும், பால‌ஸ்தீன‌ர்க‌ளும் த‌ங்க‌ளுக்கு சொந்த‌மான‌தாக‌ உரிமை பாராட்டுகிறார்க‌ள்.
மீட்சல் ஜி. பார்டு தனது " இஸ்ரேல் தேசம் இருக்குமா" என்ற நூலில் முகமதியருக்கு நாஸ்திகரை கீழ்ப்படுத்துவது மதசம்பந்தமானதொரு உதவி என்றும் முகமதியரை ஆளுவது அல்லது முகமதியரின் தேசங்களைக் கட்டுபடுத்துவது முகமதிரல்லாதவர்களுக்கு ஒத்துக்கொள்ளக் கூடாத ஒன்று என்றும் எழுதுகிறார். இஸ்ரேல் இஸ்லாமிய தகராற்றினை சமாளிக்க முடியாது என்பதை அறிய முற்றிலும் அடிப்படையானது இது. இஸ்லாமிய‌ உலகின் சங்கத்தில் யூதர்களின் நாடு இருப்பதை ஹாமாஸ் அல்லது இஸ்லாமிய ஜிகாத் அல்லது ஹிஸ்பொல்லா அல்லது வேதாகமத்தின் படைப்பின் காரிய‌த்தில் நம்பிக்கையுள்ள வேறு எந்த குழுவாயினும் ஏற்றுக்கொள்ளவியலும் என்பது நினைப்புக்குறியதாகும். இஸ்ரேல் புற்று நோய், (அவர்கள் அடிக்கடி பயன்படுத்தும் குறிப்பு) அது துண்டித்து தூக்கி எரியப்பட வேண்டும். அவர்கள் மனதை மாற்ற யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்கின்றனர் அவர்கள். நாளைக்கே இஸ்ரேல் மேற்கு கரையில் எல்லாப்பகுதிகளினின்றும் கிழக்கு எருசலேமிலிருந்தும் தங்கள் படைகளை விலக்கினாலும், கோலன் உச்சிகளின் ஒவ்வொரு அங்குலத்தையும் சிரியாவுக்குக் கொடுத்தாலும் சமாதானம் ஏற்படாது. ஏனெனில் 1967_ம் ஆண்டின் படியான எல்லைக் கோட்டிகுத் திரும்பி வருவதில் இஸ்லாமியக் கொள்கைக்காரர்கள் திருப்தியடையார்கள். அவர்கள் தங்கள் எல்லை மத்திய தரைக்கடல் வரைக்கும் உள்ளது என்று உரிமை கொண்டாடுகிறார்கள்.

உலக ஜனத்தொகையில் யூதர்கள் மிகச்சொற்பமானவர்களான போதிலும் 20_ம் நூற்றாண்டில் வேதியல், பொருளாதாரம், இலக்கியம், சமாதானம், பௌதீகம், மருந்து போன்ற துறைகளுக்காக வழங்கப்பட்ட நோபல் பரிசுகளில் கால்பகுதியை யூதர்களே பெற்றிருக்கிறார்கள். கேட்பதற்காக ஒருவேளை இஸ்ரேலோடு அரபு உலகின் நாடுகள் சமாதானம் செய்துகொள்ளலாம். ஆனாலும் உலகளாவிய அளவில் பூமியில் வேறு எந்த ஒரு நாடும் அவ்வளவாய் தாழவாய் நோக்கிப்பார்க்கப்படவில்லை. எதிர்காலத்தைக் குறித்த ஐயங்களிடையிலும் யூத மக்களின் வரலாறு வாழ்வின் ஒரு கதையாகும்.
அவர்கள் இஸ்ரவேலர்களாய் அல்ல யூதர்களாய் பிழைத்திருக்கிறார்கள் என பெயர் தெரியாத ஒரு நூலாசிரியர் கூறினார். தனிப்பட்ட இஸ்ரவேலரோடு அல்லது ஒரு முகமதிய இஸ்ரவேலனிடத்தில் உலகிற்கு எந்த பிரச்சனையும் இல்லை. யூத இஸ்ரவேலரோடு உலகம் வாழ முடியாது. அதன் காரனத்தையும் விளக்கவியலாது. எனக்குத் தெரிந்தவரையில் காலகாலமாக இருந்து வருகிற யூதர்களுக்கு விரோதமான போக்கும், விளக்கக்கூடிய நியாயமான எந்த முறையையும் பின்பற்றாமல் மெய்யாகவே அர்த்தமற்ற ஒரு சமூக கோட்பாடாகவே இருந்து வந்திருக்கிறது. யூத விரோதக் கொள்கை உலகமெங்கும், ஒவ்வொரு தலைமுறையிலும், எல்ல மக்கள் நடுவிலும் யூதன் கால்வைத்த ஒவ்வொரு கண்டத்திலும் இருந்திருக்கிறது.

ஆனால் யூத விரோதக்கொளகைக்கு நியாயமான விளக்கமொன்றுண்டு. அது ஆவிக்குரியது. இஸ்ரேல் தான் அனைத்துப் பிரச்சனைக்கும் காரணம் என்று பிசாசு உலகத்தை நம்பப் பண்ண முயற்சிக்கிறான். யூதர்கள் தங்களுக்குரியதைப் பெற்றுக்கொள்கினர் ஏன் சாத்தான் யூத மக்களைக் கொடூரமாக வெறுக்கிறான்? மைக்கேல் ப்ரௌன் " எங்கள் கரங்கள் இரத்ததால் கறைபடிந்துள்ளன." என்ற நூலில், யூதர்களைக் காயப்படுத்துவதால் சாத்தான் ஆண்டவரைக் காயப்படுத்தி, தனது சொந்த மரணாக்கினைக்கு பழிவாங்குகிறான். அவன் யூதரை அடியோடு அழிக்க முயற்சிப்பது ஆண்டவருக்கு அவமானத்தை உண்டாக்கவே. யூதர்கள் முற்றிலும் வேறுபட்ட மக்களாய் இல்லாமற் போனால், அப்போது தேவன் தமது வாக்குத்தத்தத்தைக் காத்துக்கொள்ளாதவராய் அல்லது காத்துக்கொள்ளக் கூடாதவராய்ப் போய்விடுவார்.

குறிப்பாக யூதர்களுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குத்தத்த‌ங்கள் எவை? அடிப்படையாக, ஆதியாகமம் 12:1-3_ல் ஆபிரகாமுக்குக் கொடுக்கப்பட்டவைகளின்று எடுக்கப்பட்டவை. ஜனங்கள் தேசம், ஆசீர்வாதம் இவைகளுக்கு அடுத்த வாக்குத்தத்தங்கள்.

எசேக்கியேல் 36:24_ல் " உங்களை சகல தேசங்களிலுமிருந்து சேர்த்து, உங்கள் சுய தேசத்திற்கு உங்களைக் கொண்டு வருவேன்". என்று வாசிக்கிறோம்.
இஸ்ரேல் ப‌ல‌ திசைக‌ளிலிருந்தும் தாக்க‌ப்ப‌டுகிற‌து. இருண்ட‌ கால‌ம் இன்னும் வ‌ர‌ இருக்கிற‌து, ஆனால் முடிவில் தேவ‌ன் மேற்கொள்ளுவார். வேதாக‌ம‌ முடிவுரையே இந்த‌ த‌லைய‌ங்க‌த்திற்கு மிக‌வும் ஏற்ற‌ முடிவுரையாய் அமையும். " இவைகளைச் சாட்சியாக அறிவிக்கிறவர் மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன் என்கிறார். ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும். நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்." வெளி 22:20-21. என்ற‌ அப்போஸ்த‌லனாகிய‌ யோவானின் இறுதி ஜெப‌மே ந‌ம‌து முடிவான‌ வேண்டுத‌லாயுமிருக்க‌ வேண்டும்.
Bro. Henk Kameteeg
-நன்றி 
பைபிள் அங்கிள் http://www.bibleuncle.com/2009/03/blog-post_17.html
Continue Reading →

கிறிஸ்தவர்கள் ஜாதகம் பார்க்கலாமா ???

அருட்தந்தை அவர்களே , இன்றைய காலகட்டத்தில் தன் மகனுக்கோ / மகளுக்கோ திருமணம் என்றதும் எல்லாரும் நல்ல நாளை பார்கிறார்கள். இன்னும் ஒருசிலர் மறைமுகமாக ஜாதகத்தையும் பார்கிறார்கள் அதுமாதிரமல்லாமல் செய்வினை / ஏவல் என்று பல காரியங்களுக்காக தேவன் செய்யகொடாது என்று சொன்ன காரியங்களை எல்லாம் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள் மற்ற மதத்தினவர்கள் மட்டுமல்லாமல் கிறிஸ்தவர்களும் கூட இப்படிப்பட்ட காரியங்களை செய்கிறார்கள் என்பதை பார்க்கும்போது சற்று கஷ்டமாகத்தான் இருக்கிறது. இது தொடர்பாக தங்கள் விரிவாக விளக்குவீர்களா ?


பதில்
அன்பு நண்பரே!
தங்களுடைய முதல் கேள்விக்கு விரிவான விளக்கம் கூறுவது சிரமம். காரணம்:
  • தாங்கள் கூறும், “ஜாதகம் பார்த்தல்” “செய்வினை ஏவல்”போன்றவற்றை யார் நம்புகிறார்கள்?
  • “கிறிஸ்தவர்களும் இதைச் செய்கிறார்கள்” என்றீர்கள். இந்த“கிறிஸ்தவர்கள்” என்பவர் யார்?
  • “மற்ற மதத்தினர்” என்று யாரைக் குறிப்பிடுகிறீர்கள்?
  • “இவற்றையெல்லாம் செய்யக் கூடாது” என்பவர் யார்?

  • முதலாவது, தாங்கள் கூறும் இந்த “சமய பழக்கவழக்கங்கள்” , அந்தந்த சமயம் சார்ந்தவர்களுடைய “நம்பிக்கை” .
  • அதை செய்ய அந்த சமயம் சார்ந்தவர்களுக்கு உரிமையுண்டு.
  • அவர்கள் “நம்பிக்கை” அவர்களுக்கு விடுதலை தரும்.


  • இரண்டாவது, “கிறிஸ்தவர்கள்” என்று தாங்கள் குறிப்பிடுபவர் யார்?
  • இன்று பல “அமைப்புக்கள்” தங்களை கிறிஸ்தவர்கள் என்று கூறுகிறார்கள்.
  • இவ்வாறு “கிறிஸ்தவர்கள்” என்று தங்களைக் கூறுபவர்கள் எல்லாருமே, ஏதாவது ஒரு வகையில் “பைபிளை” மையமாக வைத்தே கூறுவர்.
  • இந்த கிறிஸ்தவர்கள் பின்பற்றும் பழக்கவழக்கங்களில் சில, பைபிள் பாரம்பரியங்களை சார்ந்தவை. மற்றும் சில, சபை பாரம்பரியங்களை சார்ந்தவை.
  • இதில், முழுக்க முழுக்க பைபிள் பாரம்பரியத்தை தங்கள் “வாழ்க்கை முறையாக” வைத்துக் கொள்ளும் கிறிஸ்தவர்களுமுண்டு.
  • அதுபோலவே, முழுக்க முழுக்க தங்கள் சபை பாரம்பரியங்களை,“வாழ்க்கை முறையாக” பின்பற்றுபவர்களும் உண்டு.
  • இங்கே, “பைபிளை மையமாகக் கொண்டு” வாழ்பவர்கள், தாங்கள் கூறும் பழக்கவழக்கங்களை ஒருபோதும் செய்யார்.
  • இவர்களை நாம் “ஆவிக்குரிய கிறிஸ்தவர்கள்” என்று கூறுகிறோம் - 1கொரி 3:1-3.
  • அவ்வாறே “சில பாரம்பரிய பழக்கவழக்கங்களை மையமாகக் கொண்டு” வாழ்பவர்கள், மேற்சொன்ன காரியங்களை விரும்பிச் செய்வர்.
  • அவர்களுக்கு அது ஒரு “குற்ற உணரிவைத்” தராது. காரணம் , அவர்கள் “இருக்கும் இடமும்” , அங்கே தரப்படும் “உபதேசங்களும்” , “உலகு சார்ந்தவை”.
  • இத்தகையவர்களை “உலக கிறிஸ்தவர்கள்” என்று பார்க்கிறோம் - உரோ 12:1-2.
  • எனவே, தாங்கள் குறிப்பிடும் காரியங்களைச் செய்யும் மந்தைகளுக்கு, அது குற்றமாக இருக்காது.
  • ஆனால், அதையெல்லாம் பற்றி கவலைப்படாத, சபை மேய்ப்பர்களுக்கு, அது மாபெரும் குற்றம்.
  • ஆண்டவரின் நாளில், “எளிய விசுவாசிகளின்” பாவத்துக்கு காரணமாயிருக்கும் சபைகளுக்கு ஐயோ!
  • நன்றி http://www.catholicpentecostmission.in/QuestionAnswer.html
Continue Reading →

உண்மையில் நாம் வாழும் காலம் இறுதி காலமா ? பாகம் 07

உங்கள் கவனத்திற்கு'' - ஒரு அவசரமான ஆவணப்படம்


Continue Reading →

அவசர கால வாக்குத்தத்தம்

 உங்களது  வாழ்கையில் ஏற்படும் பலவீனங்கள் தடுமாற்றங்கள் கவலைகளில் தேவனிடம் இருந்து ஒரு வாக்குத்தத்தம் பெற உள்ளது அவசர கால வாக்குத்தத்தம் எனது வாழ்கையில் சோர்வு ஏற்பட்ட போது இந்த தளத்தில் ஒரு சிறு ஜெபத்தோடு எண்களில் ஒன்றை அழுத்தி ஒரு வாக்குத்தத்தம் பெறுவேன் அது அன்றைய நாளிற்கு மிகுந்த ஆசிர்வாதமாக   இருக்கும்  இங்கே http://www.catholicpentecostmission.org/promise%20home%20page.html
Continue Reading →

விண்ணப்பத்தை கேட்டருளும் விண்ணில் வாழும் ஜேசு தேவா song



விண்ணப்பத்தை கேட்டருளும் 
விண்ணில் வாழும் ஜேசு தேவா
 விண்ணப்பத்தை கேட்டருளும்
 விண்ணில் வாழும் ஜேசு தேவா 
வா வா தேவா வா வா தேவா
வா வா தேவா என் மனக் கோவிலில் வா தேவா 
வா வா தேவா வா வா தேவா வா வா தேவா
 என் மனக் கோவிலில் வா தேவா
 அப்பா பிதாவே அன்பான தேவா  மனிதர்கள் குறை நீக்கும் ஆண்டவரே  அப்பா பிதாவே அன்பான தேவா  மனிதர்கள் குறை நீக்கும் ஆண்டவரே 
அன்பான தெய்வமே ஆவியை தாரும் ஆவியின் வல்லமையால் நிறைத்தருளும் 
அன்பான தெய்வமே ஆவியை தாரும் ஆவியின் வல்லமையால் நிறைத்தருளும்
விண்ணப்பத்தை கேட்டருளும் விண்ணில் வாழும்ஜேசு தேவா ......
துன்பம் துயரங்கள் சூழ்ந்திடும் வேளை மனிதனே ஆண்டவரே துதித்திடுங்கள் (2)
ஆவியில் புதுப் படைப்பாய் ஆகிடவே  மனிதனே ஆண்டவரே துதித்திடுங்கள்(2)

தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்
Continue Reading →