கிறிஸ்தவர்கள் ஜாதகம் பார்க்கலாமா ???

அருட்தந்தை அவர்களே , இன்றைய காலகட்டத்தில் தன் மகனுக்கோ / மகளுக்கோ திருமணம் என்றதும் எல்லாரும் நல்ல நாளை பார்கிறார்கள். இன்னும் ஒருசிலர் மறைமுகமாக ஜாதகத்தையும் பார்கிறார்கள் அதுமாதிரமல்லாமல் செய்வினை / ஏவல் என்று பல காரியங்களுக்காக தேவன் செய்யகொடாது என்று சொன்ன காரியங்களை எல்லாம் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள் மற்ற மதத்தினவர்கள் மட்டுமல்லாமல் கிறிஸ்தவர்களும் கூட இப்படிப்பட்ட காரியங்களை செய்கிறார்கள் என்பதை பார்க்கும்போது சற்று கஷ்டமாகத்தான் இருக்கிறது. இது தொடர்பாக தங்கள் விரிவாக விளக்குவீர்களா ?


பதில்
அன்பு நண்பரே!
தங்களுடைய முதல் கேள்விக்கு விரிவான விளக்கம் கூறுவது சிரமம். காரணம்:
  • தாங்கள் கூறும், “ஜாதகம் பார்த்தல்” “செய்வினை ஏவல்”போன்றவற்றை யார் நம்புகிறார்கள்?
  • “கிறிஸ்தவர்களும் இதைச் செய்கிறார்கள்” என்றீர்கள். இந்த“கிறிஸ்தவர்கள்” என்பவர் யார்?
  • “மற்ற மதத்தினர்” என்று யாரைக் குறிப்பிடுகிறீர்கள்?
  • “இவற்றையெல்லாம் செய்யக் கூடாது” என்பவர் யார்?

  • முதலாவது, தாங்கள் கூறும் இந்த “சமய பழக்கவழக்கங்கள்” , அந்தந்த சமயம் சார்ந்தவர்களுடைய “நம்பிக்கை” .
  • அதை செய்ய அந்த சமயம் சார்ந்தவர்களுக்கு உரிமையுண்டு.
  • அவர்கள் “நம்பிக்கை” அவர்களுக்கு விடுதலை தரும்.


  • இரண்டாவது, “கிறிஸ்தவர்கள்” என்று தாங்கள் குறிப்பிடுபவர் யார்?
  • இன்று பல “அமைப்புக்கள்” தங்களை கிறிஸ்தவர்கள் என்று கூறுகிறார்கள்.
  • இவ்வாறு “கிறிஸ்தவர்கள்” என்று தங்களைக் கூறுபவர்கள் எல்லாருமே, ஏதாவது ஒரு வகையில் “பைபிளை” மையமாக வைத்தே கூறுவர்.
  • இந்த கிறிஸ்தவர்கள் பின்பற்றும் பழக்கவழக்கங்களில் சில, பைபிள் பாரம்பரியங்களை சார்ந்தவை. மற்றும் சில, சபை பாரம்பரியங்களை சார்ந்தவை.
  • இதில், முழுக்க முழுக்க பைபிள் பாரம்பரியத்தை தங்கள் “வாழ்க்கை முறையாக” வைத்துக் கொள்ளும் கிறிஸ்தவர்களுமுண்டு.
  • அதுபோலவே, முழுக்க முழுக்க தங்கள் சபை பாரம்பரியங்களை,“வாழ்க்கை முறையாக” பின்பற்றுபவர்களும் உண்டு.
  • இங்கே, “பைபிளை மையமாகக் கொண்டு” வாழ்பவர்கள், தாங்கள் கூறும் பழக்கவழக்கங்களை ஒருபோதும் செய்யார்.
  • இவர்களை நாம் “ஆவிக்குரிய கிறிஸ்தவர்கள்” என்று கூறுகிறோம் - 1கொரி 3:1-3.
  • அவ்வாறே “சில பாரம்பரிய பழக்கவழக்கங்களை மையமாகக் கொண்டு” வாழ்பவர்கள், மேற்சொன்ன காரியங்களை விரும்பிச் செய்வர்.
  • அவர்களுக்கு அது ஒரு “குற்ற உணரிவைத்” தராது. காரணம் , அவர்கள் “இருக்கும் இடமும்” , அங்கே தரப்படும் “உபதேசங்களும்” , “உலகு சார்ந்தவை”.
  • இத்தகையவர்களை “உலக கிறிஸ்தவர்கள்” என்று பார்க்கிறோம் - உரோ 12:1-2.
  • எனவே, தாங்கள் குறிப்பிடும் காரியங்களைச் செய்யும் மந்தைகளுக்கு, அது குற்றமாக இருக்காது.
  • ஆனால், அதையெல்லாம் பற்றி கவலைப்படாத, சபை மேய்ப்பர்களுக்கு, அது மாபெரும் குற்றம்.
  • ஆண்டவரின் நாளில், “எளிய விசுவாசிகளின்” பாவத்துக்கு காரணமாயிருக்கும் சபைகளுக்கு ஐயோ!
  • நன்றி http://www.catholicpentecostmission.in/QuestionAnswer.html

0 comments:

Post a Comment