- ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு எனும் உன் மூதாதையருக்கு கொடுப்பதாக, ஆணையிட்டுக் கூறிய நாட்டுக்குள், உன் கடவுளாகிய ஆண்டவர், உன்னைப் புகச் செய்யும் போதும், நீ கட்டி எழுப்பாத பரந்த வசதியான நகர்களையும்,
- நீ நிரப்பாத எல்லா செல்வங்களால் நிறைந்த வீடுகளையும், நீ வெட்டாத பாறைக் கிணறுகளையும், நீ நடாத திராட்சைத் தோட்டங்களையும், ஒலிவத் தோப்புகளையும், அவர் உனக்குக் கொடுக்கும் போதும், நீ உண்டு நிறைவு கொள்ளும் போதும்,
- அடிமைத்தன வீடாகிய, எகிப்து நாட்டினின்று, உன்னை வெளியே கூட்டி வந்த, ஆண்டவரை மறந்து விடாதபடி, கவனமாய் இரு - இ.ச 6:10-12.
- இன்று, நான் உங்களுக்கு கட்டளையிடுகின்ற கட்டளைகள், நியமங்கள், முறைமைகள், ஆகியவற்றினின்று, வழுவியதன் மூலம், உங்கள் கடவுளாகிய ஆண்டவரை, மறந்து போகாதபடி, கவனமாய் இருங்கள் - இ.ச 8:11.
- நீங்கள் உண்டு நிறைவு கொள்ளும் போதும், அழகிய வீடுகளை கட்டி, அவைகளில் குடியிருக்கும் போதும்,
- உங்கள் ஆடு மாடுகள் பலுகும் போதும், வெள்ளியும் பொன்னும், உங்களுக்கு மிகுதியாகும் போதும், உங்களுக்கு உள்ளதெல்லாம் பெருகும் போதும்,
- நீங்கள் நெஞ்சில் செருக்குற்று, அடிமைத்தனத்தின் வீடாகிய, எகிப்து நாட்டிலிருந்து, உங்களை கூட்டி வந்த, உங்கள் கடவுளாகிய ஆண்டவரை மறந்து விட வேண்டாம் - இ.ச 8: 12-14.
- அவரே, கொள்ளிவாய்ப் பாம்புகளும், தேள்களும் நிறைந்த, நீரற்று, வறண்ட நிலமான, பரந்த கொடிய பாலைநிலத்தில் உங்களை வழிநடத்தியவர். இறுகிய பாறையிலிருந்து, உங்களுக்காக, நீரைப் புறப்படச் செய்தவர் - இ.ச 8:15.
- உங்கள், மூதாதையருக்கு தெரிந்திராத மன்னாவால், பாலைநிலத்தில் உங்களை, உண்பித்தவர், இறுதியில் உங்களுக்கு நல்லது செய்வதற்காக, உங்களை எளியவராக்கி, சிறுமைப்படுத்தி, சோதித்தவரும் அவரே - இ.ச 8:16.
- எனவே, எங்கள் ஆற்றலும், எங்கள் கைகளின் வலிமையுமே, இந்த செல்வங்களை எங்களுக்கு ஈட்டித் தந்தன என்று, உங்கள் உள்ளங்களில் எண்ணாதபடி, கவனமாய் இருங்கள் - இ.ச 8:17.
- உங்கள் மூதாதையருடன் ஆணையிட்டு செய்து கொண்ட உடன்படிக்கையை உறுதிப்படுத்துமாறு, இந்நாளில் இருப்பது போன்ற, செல்வங்களை ஈட்ட வல்ல, ஆற்றலை உங்களுக்கு அளித்த, உங்கள் கடவுளாகிய ஆண்டவரை, நினைவில் கொள்ளுங்கள் - இ.ச 8:18.
- நன்றி http://www.catholicpentecostmission.in/kathampam.html
0 comments:
Post a Comment