என் அன்பு மகனே ஏன் கலங்குகிறாய் உன்னை நான் உன் தாயின் கருவில் இருக்கும் போதே பெயர் சொல்லி அழைத்தேன். ஏன் என் உள்ளங்கையில் உனது பெயரை எழுதி வைத்திருக்கிறேன். உனக்காகவே எனது அத்தனை மகிமையையும் துறந்து வானில் இருத்து இறங்கி வந்தேன் . உன் பரம்பரை பரம்பரையாக மற்றும் உங்களில் பிறக்கவிருக்கும் மனிதர்கள் அனைவரது பாவங்களையும் ஒரு மனிதனுக்குரிய பலவீனத்தோட சுமந்து தீர்த்தேன். அதனால் உனக்கு ஏற்படும் சகல வாதைக்கும் நான் பூமியில் இருக்கும் போது எனக்கும் ஏற்பட்டவையே அவ்வாதைகள் உனக்கும் ஏற்பட்டதைவிட பலமடங்காக எனக்கு ஏற்பட்டது என் மகனே , எனவே உனது துன்பங்களை நான் அறிவேன் . நான் உனக்காக பரிதவிக்கிறேன் . நீ என்னை ஏற்றுக் கொள் மறுதலித்து தூசிக்கும் போதும் நான் உன்னை அன்பு செய்கிறேன். நான் பரலோக மகிமையில் இருந்து கொண்டும் வெறுமனே உன்னை அன்பு செய்கிறேன் என்று வாயின் வார்த்தையாய் சொல்லாமல், பரலோக மகிமையைவிட்டு இறங்கி வந்து சகல விதத்திலும் மனிதரைப் போல் ஆகி உனக்காக மாகா வியாகுலப்பட்டு, சிலுவையில் இரத்தம் சிந்தி மரித்து சகலத்தையும் ஆயத்தம் பண்ணிவிட்டே உம்மை அன்பு செய்கிறேன். என் அன்பை புரிந்து கொள் மகனே! உன் பாவங்கள் எவ்வளவு பெரியதாய் இருந்தாலும் அதை நான் பார்ப்பதில்லை. காரணம் நீ என் மகன் நான் உனது தகப்பன் எனவே தான் நான் உனக்காக அனைத்து பாவ பரிகாரம் செய்தேன் .உனக்காக என் உயிரையும் கொடுத்தேன் . நீ என்அன்பை புரிந்து, என் இரக்கத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்பதையே நான் உனக்காக ஏங்கி காத்திக்கிறேன். நான் உனக்காக அழுகிறேன். நான் உனக்காக பரிதவிக்கிறேன். மனம் மாறு மகனே என் அன்பை புரிந்து கொள் பாவத்தை அறிக்கையிடு, என்னையன்றி உலக்கத்திலே யாரும் பாவத்தில் இருந்து விடுதலை அளிக்க முடியாது. வேத புத்தகத்தை வாசி என் மகனே! அதை வாசிக்க வாசிக்க என் ஆவி உன் மேல் தங்கும். நான் நியாயம் தீர்க்க வரும் முன் நீ மனம்மாறி என் தண்டனைக்கு நீ தப்ப வேண்டும். என நான் விரும்புகின்றேன். எனவே விரைவாக பாவங்களை அறிக்கையிட்டு மனமாறு மனமாறு காலம் சமீபம் இனி காலம் செல்லாது .
Popular Posts
-
ஜேசு என்பவர் யார் ? அவர் ஏன் இந்த உலகத்திற்க்கு வந்தார். கிறிஸ்தவம் என்பது வெள்ளைகாரனின் மதமா?? ரிக் வேதத்தில் கூறப்படும் பிரஜ...
-
உயிர்த்தார் கிறிஸ்து உயிர்த்தார் இந்த உலகை ஜெயித்து விட்டார் மனுகுலத்தை மீட்ட இறைவன் கல்லறைவிட்டு உயிர்த்துவிட்டார் அலகையின் பிடியில...
-
ஜேசு இப்போதும் அற்புதம் செய்து வருகிறாரா? ஆண்டவர் ஜேசுவின் அற்புதசுகபடுதலின் அருமையான சாட்சியம் ஜேசு சாமி என்ற ஒருவர் இருக்கிறார்
-
ஒவ்வொரு தமிழனின் மனதிலும் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவின் தீர்மானத்திற்கு இந்தியாவின் பதில் என்ன? என்ற எதிர்பார்ப்பு நிறைந்ததாக உள்ளது . வழம...
-
என் மகனே உனக்காக ஏங்குகிறேன். என் மகனே உனக்காக பரிதவிக்கிறேன் .என் மகனே உனக்காக வழிமேல் விழி வைத்து காத்திருக்கிறேன் .என் மகனே என் இதயத்தின்...
-
உம்மைக் கண்டாலே என்றும் ஆனந்தமையா உம்மை புகழ்ந்தால் என் நாவு இனிமையாகும் உன் வழி சென்றால் என் கால்கள் தாளரவில்லை உம்மை நினைத்தால் என்...
Blog Archive
-
▼
2015
(316)
-
▼
June
(11)
- வெலிக்கடை சிறையில் ஒரு பெண் கைதியின் வாழ்வில் இயேசு !
- Dr Paul Dhinakaran அவர்கள் குடுபத்துடன் பிரான்ஸ் இ...
- என் உயிருக்கு உயிரான அன்பை நான் தேடுகிறேன்
- குஜராத் மீது குறிப்பாக ஒரு பயங்கரம் வரும்
- நாவடக்கம்
- என் உள்ளங்கையில் உனது பெயரை எழுதி வைத்திருக்கிறேன்
- கிறிஸ்தவ பெண்கள் திருமணதிற்கு தங்களை ஆயுத்தபடுத...
- ஆபரேசன் "வெட்டிங் ஹால்".. மனித வெடிகுண்டுகள் மூலம்...
- சகல பாவ சாபங்களை நீக்கி பரிசுத்தபடுத்தும் இயேசுவின...
- கவலைபடாதே மகனே song
- எப்பொழுதும் உன் நினைவாக இருக்கும் இயேசு
-
▼
June
(11)
0 comments:
Post a Comment