இஷ்டப்பட்ட தெய்வத்தையெல்லாம் கும்பிட்டும் பாத்தாச்சு

உனக்கொருவர் இருக்கிறார்
உன்னை விசாரிக்கத் துடிக்கிறார்
உன்னையும் என்னையும் இயேசு நேசிக்கிறார்
நம்மை உள்ளங்கைகளில் வரைந்திருக்கிறார் – 2
1. ஆகாதவன் என்று உன்னை யார்தள்ளினாலும்
ஆபிரகாமின் தேவன் உன்னை தள்ளிவிடுவாரோ
தஞ்சம் என்று வருபவரைத் தள்ளாத நேசர் அவர் – 2
அஞ்சிடாதே மகளே, மகனே என்று உன்னைத் தேற்றிடவே
2. வியாதியஸ்தன் என்று உன்னை ஒதுக்கி வைப்பார்கள்
வேண்டாத வார்த்தைகளைச் சொல்லி புண்படுத்துவார்கள்
வாழ்வதா சாவதா என்று நீ அழுது புலம்பிடுவாய்
வாழத்தான் வேண்டுமென்று வியாதியிலே சுகம் தரவே
3. சாதிசனம் மறந்திட்டாலும் மறந்திடாதவர்
ஜோதிகளின் பிதாவாம் இயேசுவானவர்
சூழ்நிலைகள் மாறினாலும் இயேசு உன்னை மறப்பதில்லை
சிலுவையில் ஜீவன் விடும் நேரத்திலும் வெறுக்கவில்லை
4. கஷ்டப்படும் போதும் நமக்கு உதவுவாரில்லை
கடன்பட்ட போது அதை தீர்ப்பவரில்லை
இஷ்டப்பட்ட தெய்வத்தையெல்லாம் கும்பிட்டும் பாத்தாச்சு
நம்ம கஷ்டங்களை தீர்க்க அவை முன் வரவில்லை
5. உலகத்தில் தெய்வங்கள் உண்டென்று
சொல்வதெல்லாம் சும்மாங்க
இயேசு கிறிஸ்து ஒருவரே மெய்யான தெய்வமுங்க
ஜனங்களின் பாவம் நீக்கி இரட்சிக்க வந்த தெய்வமுங்க
கர்த்தாவே தேவர்களில் உமக்கொப்பானவர் யார் வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார் (2) உமக்கொப்பானவர் யார் – 2 வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார் – 2 1. செங்கடலை நீர் பிளந்து உந்தன் ஜனங்களை நடத்திச் சென்றீர் (2) நீர் நல்லவர் சர்வவல்லவர் என்றும் வாக்கு மாறாதவர் (2) உமக்கொப்பானவர்… 2. தூதர்கள் உண்ணும் உணவால் உந்தன் ஜனங்களை போஷித்தீரே (2) உம்மைப் போல யாருண்டு இந்த ஜனங்களை நேசித்திட (2) உமக்கொப்பானவர்… 3. கன்மலையை நீர் பிளந்து உந்தன் ஜனங்களின் தாகம் தீர்த்தீர் உம் நாமம் அதிசயம் என்றும் அற்புதம் செய்திடுவீர் உமக்கொப்பானவர்…

0 comments:

Post a Comment