தங்கம் சங்க காலம் முதல் இன்று வரை ஓர் தனிப்பட்ட அவா மனிதர்களுக்கு இதன் மீது காணப்படத்தான் செய்கின்றது.
இது வெறுமனே பொருளாதார நோக்கத்திற்காகவும் ஆபரணங்களுக்காகவும் மட்டுமே பயன்படுத்தப்படுவதில்லை.
மாறாக அதன் முக்கிய பயன்பாட்டில் ஒன்று தான் தங்கம் என்பது சிறந்ததொரு மின்கடத்தி நாம் அன்றாடம் பயன்படுத்தும் அனைத்து மின் சாதனங்களிலும் இதன் பங்கு நிச்சயம் காணப்படுகின்றது.
அது சிறிய அளவாகவே பயன்படுத்தப்பட்டாலும் அதன் பயன்பாடு என்பது மிக முக்கியமான ஒன்று.
மேலும் விண்வெளிக்கு அனுப்பப்படும் விண்கலங்கள், செயற்கை கோள்கள், விண்வெளி ஓடங்கள் போன்றவற்றில் கதிர்வீச்சை தடுக்கும் கவசமாக இது பயன்படுத்தப்படுகின்றது.
விண்ணில் சுற்றித்திரியும் டெலஸ்கோப்புகள் என அனைத்திலும் தங்கம் ஒரு போர்வை போல் சுற்றப்படுகின்றது.
அந்த தங்க போர்வை தான் அதன் உள்ளே காணப்படும் மின்னனு சாதனங்களை விண்வெளியின் அபாய கதிர்வீச்சுகளில் இருந்து பாதுகாக்கின்றது.
சற்றே சிந்தித்து பார்ப்போம், வேற்றுகிரகவாசிகளுடன் ஒப்பிடுகையில் நாம் விண்வெளி செயற்பாடுகளில் பின்தங்கியவர்கள் தான் நமக்கே விண்வெளி செயற்பாடுகளுக்கு இவ்வளவு தங்கம் தேவைபட்டால் எந்நேரமும் விண்ணில் சுற்றிதிரியும் அவர்களுக்கு சுமார் எவ்வளவு தங்கம் தேவைபடுமாக இருக்கும்?
உண்மையில் பார்க்க போனால் இன்று நாம் பயன்படுத்தும் தங்கம் குறைவுதான் முன்னைய காலபகுதிகளில் அதிகளவான தங்கம் காணப்பட்டது. அன்றைய மாளிகைகளின் மேற்கூரையாகவும் தங்கத்தை பயன்படுத்தியிருக்கின்றார்கள்.
பல ஆயிரம் வருடங்களுக்கு முன் சிந்து நதியில் தங்கத்தால் ஆன படகுகள் பயன்படுத்தப்பட்டனவாம்.அதாவது நாம் இன்று இரும்பை பயன்படுத்து போலவே அன்று தங்கம் அதிக அளவில் காணப்பட்டுள்ளது.
அவ்வாறு எனின் அந்த தங்கங்கள் எங்கே சென்றன?சில நேரங்களில் வேற்றுகிரகவாசிகள் கூட நமது தங்கத்தை திருடி செல்ல வாய்புகள் அதிகம் அதற்காக தான் அவர்கள் அடிக்கடி பூமிக்கு வந்துவிட்டு செல்லலாம்.
இவ்விடத்தில் தான் இறைவனும் வேற்றுகிரகவாசியும் ஒன்று என்ற கருத்தும் உருவாக ஆரம்பிக்கின்றது.
காரணம் நமது இந்து மத கோட்பாட்டின் அடிபடையில் அன்றில் இருந்து இன்று வரை இறைவனுக்கு தங்கம் காணிக்கையாக்கப்பட்டு தான் வருகின்றது.
இந்து மத கடவுள்களும் தங்க ஆபரணங்களை அதிக அளவில் அணிந்தபடி தான் (சிவனை தவிர்த்து) நமக்கு காட்சியளிக்கின்றது.
ஒரு வேளை விண்வெளியில் சுற்றிதிரியம் வேற்றுகிரக வாசிகள் என யுகிக்கும் கடவுள்களும் தம்மை விண்வெளி கதிர்வீச்சில் இருந்து காப்பாற்றி கொள்வதற்காகவும் தங்க ஆபரணங்களை அணிந்திருக்கலாம் அல்லவா?
0 comments:
Post a Comment