உலகை ஆட்டி படைக்கும் "ப்ளூவேல் கேம்"- வீடியோ

அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்தவர் சசிகுமார். அவர் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் சசிகுமார் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அவரது செல்போனை எடுத்துப் பார்த்ததில் அதில் உயிரைக் குடிக்கும் ப்ளூவேல் கேம் லிங்க் இருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனால் பல்கலைக்கழக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முன்னதாக மதுரையை சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவர் ப்ளூவேல் கேம் விளையாடி தற்கொலை செய்து கொண்டார். அதனால் ஏற்பட்ட பரபரப்பு அடங்கும் முன்பு மீண்டும் ஒரு தற்கொலை சம்பவம் நடந்துள்ளது. ப்ளூவேல் விளையாட்டிற்கு பல மாநிலங்களில் இளைஞர்கள் தற்கொலை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment