உண்மையில் நாம் வாழும் காலம் இறுதி காலமா ? பாகம் 11

நவீன உலகில் எங்கு பார்த்தாலும் பெய்யும் போலியான அன்பும் நடிப்பும் நயவஞ்சகம் விபசாரம்,வேசித்தனம், கொலைவெறியர்,காம வெறியர் ,பண வெறியர்,என எல்லாரும் வெறிபிடித்து  அலைகின்றனர் அனைவர் உள்ளத்திலும் கடவுள் ஒருவர் இருக்கின்றாரா?ஏன் அவர் இதை எல்லாம் பார்த்து  கொண்டிருகிறார். என்ற எண்ணம் தோன்றுவது இயற்கையே .நாம் கலியுகத்தின் மத்தியபகுதியில் வாழ்ந்து வருகிறோம். என்பதிற்கு இத்தகைய நிகழ்வுகள் மிக பெரிய  சான்றாக அமைகின்றது .இறுதி கால மக்கள் எப்படி இருப்பார்கள் என்று வானத்தையும் பூமியை யும் தனது வாயின் வார்த்தையால் உருவாகிய ஒரேஒரு மெய் தெய்வம் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே எழதி கொடுத்துள்ளார்.வரும் ஆபத்துகளில் இருந்து தப்பிக்க வேண்டிய ஒரே ஒரு வழியையும் வேதாகமத்தில் காட்டியுள்ளார்.உலகில் வாழும் எந்த மனிதனாலும்  எந்த நாட்டை சேர்ந்தவனாய் இருந்தாலும் அவர்கள் முன் இரண்டு தெரிவுகள் உள்ளது .

1) வானத்தையும் பூமியையும் படைத்த  ஒரே மெய்யான தெய்வம்  இயேசுவை பின்பற்றுவது (நிலை  வாழ்வு தருவது )
2) ஒரு உலக கூட்டாட்சியான சர்வாதிகாரி சொல்லும் உலக பொது மதத்தை   பின்பற்றுவது (நித்ய அழிவு )

இந்த இரண்டில் வாழ்வா ? சாவா?  எந்த தெரிவை பின்பற்றுவது என்பது ஒருவரது தனிபட்ட விருபத்துக்கு  ஒரே மெய்யான தெய்வம் இயேசு விட்டுள்ளார் . 

1வது தெரிவை நீங்கள் தெரிந்தால் இந்த உலகத்தில்   நீங்கள் கடும் உபத்திர்த்தையும் ,கடும் ஆபத்தையும் ,கடும் அவமானத்தையும் ஏன்  உங்கள் உயிரையும்  இயேசுக்காக விட வேண்டி வரும் என வேத வசனம் முன் உரைக்கிறது  ஆனால் உங்களுக்கு  நிலை  வாழ்வு கிடைப்பது  உறுதி  பரலோகத்தில் காண்க
"வெளிப்படுத்துதல் 12:11 
 நமது சகோதரர்கள் ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தாலும், தங்கள் சாட்சியின் வசனத்தாலும் சாத்தானை வென்றார்கள். அவர்கள் தம் வாழ்வைக் கூட அதிகம் நேசிக்கவில்லை. அவர்கள் மரணத்துக்கும் அஞ்சவில்லை."


2வது தெரிவை நீங்கள் தெரிந்தால் இந்த உலகத்தில் உங்களது ஆயுட்காலம் முழுவதும் சகலவிதமான  உலக சுகபோகங்கள் அனைத்தையும் நீங்கள் அனுபவிக்கலாம் .ஆனால் இரண்டு  நிபந்தனையை நீங்கள் கட்டாயம் நிறை வேற்றியே ஆக வேண்டும்.



நிபந்தனை 01) காலை ,மதியம்,  மாலை மூவேளையும் நீங்கள் உலகத்தின் எங்கு நின்றாலும் ஒரு சிலை உள்ள திசை நோக்கி விழுந்து வணங்க வேண்டும் .அத்துடன் அவர்கள் சொல்லும் ஒரு மந்திரத்தை சொல்லி  சொல்லி வணங்க  வேண்டியது  ஒவொரு தனி மனிதனும் கட்டாயம் செய்ய  வேண்டும் இல்லையேல் நீங்கள் கொள்ள படுவது உறதி ( இந்த நடைமுறை ஏற்கனவே ஒரு மதத்தில் நடைமுறையில் உள்ளது )

காணக 
வெளிப்படுத்துதல் 12 :14
    14. மிருகத்தின்முன்பாக அந்த அற்புதங்களைச் செய்யும்படி தனக்குக் கொடுக்கப்பட்ட சத்துவத்தினாலே பூமியின் குடிகளை மோசம்போக்கி, பட்டயத்தினாலே காயப்பட்டுப் பிழைத்த மிருகத்திற்கு ஒரு சொரூபம் பண்ணவேண்டுமென்று பூமியின் குடிகளுக்குச் சொல்லிற்று.

    15. மேலும் அம்மிருகத்தின் சொரூபம் பேசத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்தை வணங்காத யாவரையும் கொலைசெய்யத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்திற்கு ஆவியைக் கொடுக்கும்படி அதற்குச் சத்துவங்கொடுக்கப்பட்டது.


நிபந்தனை 02)  உங்களது நடவடிக்கையை எந்தநேரமும்  கண்காணிக்க ஒரு முத்திரையை உங்களது உடலில் பதித்தால் மாத்திரமே 7 ஆண்டுகள் ஒரு உலக கூட்டாட்சியான சர்வாதிகார ஆட்சியில் சகலவிதமான  உலக சுகபோகங்கள் அனைத்தையும் நீங்கள் அனுபவிக்கலாம். 

ஆனால் இந்த உலக வாழ்க்கை முடிந்த பின் சாத்தானுடன் மற்றும் அவனுடைய கள்ள தீர்கதரிசியுடன் நித்திய அக்னியில் பரலோகத்தில்  வதை கபடுவது உறுதி 
இயேசுகிறிஸ்துவைத் தரித்துக்கொள்ளுங்கள்.  
தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்

உண்மையில் நாம் வாழும் காலம் இறுதி காலமா ? பாகம் 01


உண்மையில் நாம் வாழும் காலம் இறுதி காலமா ? பாகம் 03

உண்மையில் நாம் வாழும் காலம் இறுதி காலமா ? பாகம் 05


0 comments:

Post a Comment