இணைத்தள ஆபாசத்திலிருந்து குழந்தைகளைக் காப்பாற்றி அவர்களது எதிர்காலத்தை சிறப்பாக கட்டமைக்க உதவ வேண்டுமென 6 வயது முதல் ஆபாசப் பத்திரிகைக்கு அடிமையாகி பெரும் சீரழிவை சந்தித்த அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரைச் சேர்ந்த லிஸ் வோக்கர் என்ற பெண் தெரிவித்துள்ளார்.
தற்போது இவருக்கு 42 வயதாகிறது. 3 குழந்தைகளுக்குத் தாய் இவர். சிறு வயது முதலே ஆபாசப் படம் பார்ப்பதற்கு அடிமையானவர் இவர். தற்போது அதிலிருந்து அவர் மீண்டுள்ளார். ஆனால் இத்தனை காலமாக தான் பட்ட மனக்கஷ்டத்தை அவர் பகிரங்கமாக பகிர்ந்துள்ளார்.
தான் பட்ட கஷ்டம் சொல்லில் வடிக்க முடியாதது என்று கூறியுள்ள லிஸ், இதிலிருந்து மீள தான் ஒரு பெரிய போராட்டத்தையே நடத்த வேண்டியிருந்ததாகவும் விவரித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,
இன்று இணைத்தில் அத்தனையும் கொட்டிக் கிடக்கிறது. இது குழந்தைகளுக்கு பெரும் அபாயமாக வந்திருக்கிறது. இதை சுட்டிக் காட்டி, எப்படி இணையத்தில் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது பற்றி Not For Kids! என்ற நூலை எழுதியுள்ளேன்.
6 வயது முதல் நான் ஆபாசப் படம் பார்க்க ஆரம்பித்தேன். அதற்கு அடிமையாகிப் போனேன். ஆனால் அது எனது வாழ்க்கையை அழித்து விட்டது.
என்னை மன உளைச்சலுக்குள்ளாக்கி விட்டது. மன ரீதியாக நான் கடுமையாக பாதிக்கப்பட்டேன் என்று கூறியுள்ளார் .
நான் 6 வயதாக இருந்தபோது எனது பாடசாலை பேருந்தில், எனக்குப் பக்கத்தில் இருந்த என்னை விட மூத்த மாணவியிடமிருந்து ஆபாசப் பத்திரிகை குறித்த அறிமுகம் கிடைத்தது. அது ஒரு கிராபிக்ஸ் படங்களுடன் கூடிய ஆபாச பத்திரிகை.
அந்தப் புத்தகத்தை தனது அண்ணனின் படுக்கைக்குக் கீழிருந்து தான் எடுத்ததாக அவள் என்னிடம் சொன்னாள். அதுதான் நான் முதலில் பார்த்த, படித்த ஆபாசப் பத்திரிகை.
அதன் பின்னர் நான் தினசரி ஆபாசப் படம் பார்க்க ஆரம்பித்தேன். தினசரி காலையில் அதைப் பார்த்தால்தான் திருப்தி என்ற நிலைக்கு வந்தேன். வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் பார்க்க ஆரம்பித்தேன்.
எனது செக்ஸ் குறித்த ஆர்வம் கட்டுக்கடங்காமல் போனது. 12 வயதில் நான் கன்னித்தன்மையை இழந்தேன். மது விருந்து, செக்ஸ், ஆபாசக் கதைகள் என தடம் மாறினேன்.
20 வயதுக்குள்ளேயே கிட்டத்தட்ட அத்தனை கெட்ட பழக்கங்களையும் பழகி விட்டேன். போதைப் பொருள் பழக்கமும் என்னைத் தொற்றிக் கொண்டது. இதனால் உடல் நலம், மன நலம் பாதிக்கப்பட்டு அடிக்கடி மருத்துவமனைக்கும் சென்று வந்தேன்.
இப்படி 6 வயது முதல் ஆபாசப் படத்திற்கு அடிமையாகி பெரும் சீரழிவை சந்தித்த எனக்கு வாழ்க்கையே அழிந்து விட்டது, சலித்துப் போய் விட்டது.
இப்போது நான் மீண்டு வந்துள்ளேன். இளைஞர்கள் மத்தியில் ஆபாசப் படத்தால் ஏற்படும் அபாயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன்.
இன்று இணையத்தளத்தில் அத்தனையும் கொட்டிக் கிடக்கிறது. இது குழந்தைகளுக்கு பெரும் அபாயமாக வந்திருக்கிறது. இதை சுட்டிக் காட்டி, எப்படி இணையத்தளத்தில் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது விவரித்து Not For Kids! என்ற நூலை எழுதியுள்ளேன்.
இணையத்தள ஆபாசத்திலிருந்து குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டியது அவசியம். முக்கியம். அது அவர்களது எதிர்காலத்தை சிறப்பாக கட்டமைக்க உதவும். நாம்தான் அதைச் செய்ய வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஆபாச இணையத்தில் அடிமையாக இருந்து மீண்ட வேறு ஒரு பெண்ணின் சாட்சி காண்க
0 comments:
Post a Comment