என்னை தேடி ஒரு தெய்வம் மண்ணில் மனிதன் ஆனதே !


பிறந்த நாள் ஜேசுவின் பிறந்த நாள்
என்னை தேடி ஒரு தெய்வம் மண்ணில் மனிதன் ஆனதே
மகிழ்ந்திடுவோம்  நாங்கள் கொண்டாடுவோம்
உலகத்தின் அரசன் பிறந்துள்ளார்
ஏழ்மை வடிவில் பிறந்துள்ளார்
பலகோடி ஆண்டுகள் எதிர்பார்க்கபட்ட
மானிட மகன்  பிறந்துள்ளார்
கோடி நட்சத்திரங்கள் ஒளிந்திட ஒளியின் மகன்  பிறந்துள்ளார்
மகிழ்ந்திடுவோம்  நாங்கள் கொண்டாடுவோம்
வாசகர்களுக்கு பிறக்கும்  இயேசு பாலன்
உங்கள் இல்லங்களிலும்,
உள்ளங்களிலும் நிறை ஆசீரும்
 அருளும் வழங்குவாராக.
உங்கள் அனைவருக்கும் எனது நத்தார் வாழ்த்துக்கள்.

Continue Reading →

தீபாவளி செயற்கை கோள் வரைபடமும் நிரூபணம் ஆகும் வசனம் !

வாஷிங்டன்: அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, தீபாவளியன்று நவீன செயற்கை கோள்வாயிலாக எடுக்கப்பட்ட இந்திய வரைபடத்தினை வெளியிட்டது. கடந்த நவம்பர் 12-ம் தேதி தீபாவளியன்று ‌எடுக்கப்பட்ட படம் பல்வேறு சமூக வலைதளங்களில் வெளியாயின. இதில் நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் இந்துக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடியும் விளக்கு ஏற்றி வைக்கப்பட்டிருந்தது துல்லியமாக தெரிந்தது.இவற்றை தவிர இந்தியாவை‌ ஒட்டியுள்ள பக்கத்து நாடுகளான பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம் ஆகிய நாடுகளின் வரைபடங்களும் இவற்றின் எல்லைப்பகுதிகளும் துல்லியமாக காட்சியளித்தன.இது அண்மைய செய்தி .

 இப் படத்தின் மூலம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எழுதபட்ட வேத வசனம் உண்மை விஞ்ஞான ரீதியாக  நிரூபனம்   ஆகின்றது.  மனிதக்  கைகளால்  ஆன செயற்கை கோள்வாயிலாக    இவ்வளவு  செய்ய முடியும் போது இறைவனுக்கு ''படைப்பு எதுவும் கடவுளுடைய பார்வைக்கு மறைவாய் இல்லை. அவருடைய கண்களுக்கு முன் அனைத்தும் மறைவின்றி வெளிப்படையாய் இருக்கின்றன.''  என்ற வசனம் உண்மை என்பது நிரூபணம் ஆகின்றது 


எபிரே. 4:12-13

சகோதர,சகோதரிகளே, கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது ஆற்றல் வாய்ந்தது: இருபக்கமும் வெட்டக்கூடிய எந்த வாளினும் கூர்மையானது: ஆன்மாவையும் ஆவியையும் பிரிக்கும் அளவுக்குக் குத்தி ஊடுருவுகிறது: எலும்பு மூட்டையும் மச்சையையும் அவ்வாறே ஊடுருவுகிறது: உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீரதூக்கிப் பார்க்கிறது. படைப்பு எதுவும் கடவுளுடைய பார்வைக்கு மறைவாய் இல்லை. அவருடைய கண்களுக்கு முன் அனைத்தும் மறைவின்றி வெளிப்படையாய் இருக்கின்றன. நாம் அவருக்கே கணக்குக் கொடுக்கவேண்டும். மும் 
தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்
Continue Reading →

எனது இந்த வியாதிக்கு காரணம் என்ன?

எனது இந்த வியாதிக்கு காரணம் என்ன ? எனது பாவமா? அல்லது எனது முன்வினை பயனா ? இறைவன் என்னை கைவிட்டு விட்டாரா? என பல விதமான கேள்விகள் உங்கள் மனதில் தொன்றலாம்.</

ஜேசு சாமி என்ற ஒருவர் இருக்கிறார்

Continue Reading →

எந்தன் பாவத்தின் முட்கள் பெருகியதால் உந்தன் சிரசில் முள்முடி தைத்தேன்

தந்தை பால்றோபின்சன் வல்லமை கீதங்கள இல் இருந்து பாடல் உலகத்தின் இரட்சகரே  இவரது தளம் http://frpaulrobinson.tamilgoodnews.com/
Continue Reading →

உண்மையில் நாம் வாழும் காலம் இறுதி காலமா ?



 உண்மையில் நாம் வாழும் காலம் இறுதி காலமா ?நாம் இறுதி காலத்தில் வாழ்கிறோம் என்று எப்படி அறிந்து கொள்வது ?

2 தெசலோனிக்கேயர் 2

 2 ஒரு ஆவியினாலாவது, வார்த்தையினாலாவது, எங்களிடத்திலிருந்து வந்ததாய்த் தோன்றுகிற ஒரு நிருபத்தினாலாவது, கிறிஸ்துவினுடைய நாள் சமீபமாயிருக்கிறதாகச் சொல்லப்பட்டால், உடனே சஞ்சலப்படாமலும் கலங்காமலும் இருங்கள்.

3 எவ்விதத்தினாலும் ஒருவனும் உங்களை மோசம்போக்கதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் விசுவாச துரோகம் முந்தி நேரிட்டு, கேட்டின் மகனாகிய பாவமனுஷன் வெளிப்பட்டாலொழிய, அந்த நாள் வராது.
4 அவன் எதிர்த்துநிற்கிறவனாயும், தேவன் என்னப்படுவதெதுவோ, ஆராதிக்கப்படுவதெதுவோ, அவையெல்லாவற்றிற்கும் மேலாகத் தன்னை உயர்த்துகிறவனாயும், தேவனுடைய ஆலயத்தில் தேவன்போல உட்கார்ந்து, தன்னைத்தான் தேவனென்று காண்பிக்கிறவனாயும் இருப்பான். 
இவ் வசனத்தின் முதலில்   கேட்டின் மகனாகிய பாவமனுஷன்
வெளிப்படவேண்டும். அதற்காண  ஆயதங்கள் தற்பொழுது உலகத்தில் நடை பெற்றுக் கொண்டிருகிறது. The Satanic Bible 1969 இல் எழுத பட்டு அதற்கான ஆலயம் சின்னம் என்பன உள்ளது. இதில் வேடிக்கை என்ன வென்றால் இவர்களது சின்னம் யூதர்களின் நட்சத்திரதை கேலி  செய்வது  போல அமைத்து  இருகின்றனர் .உலகில் பல மதங்கள் உள்ளன ஏன்   யூதர்களின் நட்சத்திரதை போல அமைக்க வேண்டும் ? 
குறிப்பு ;( The Satanic Bible என google இல் தேடினால் காண முடியும்.)
காரணம் கண்க 
 நான் முந்தினவரும், நான் பிந்தினவருந்தானே, என்னைத் தவிர தேவன் இல்லையென்று இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தரும் சேனைகளின் கர்த்தராகிய அவனுடைய மீட்பரும் சொல்லுகிறார். (ஏசாயா 44:6)

இதில் இருந்து இஸ்ரவேலின் தெய்வமே உண்மை தெய்வம். எனவே அவருக்கு எதிரியான கேட்டின் மகனாகிய பாவமனுஷன் கத்தரால் தாவீது அரசருக்கு அருளப்பட்ட நட்சத்திர சின்னதை கேலி செய்வது போல அமைத்ததுடன் .மேலுள்ள வேத  வசனம் நிறைவேற தன்னைத்தான் தேவனென்று காண்பிக்க  தேவ  சின்னதை போல அமைத்தான் .காண்க (தேவன் என்னப்படுவதெதுவோ, ஆராதிக்கப்படுவதெதுவோ, அவையெல்லாவற்றிற்கும் மேலாகத் தன்னை உயர்த்துகிறவனாயும், தேவனுடைய ஆலயத்தில் தேவன்போல உட்கார்ந்து, தன்னைத்தான் தேவனென்று காண்பிக்கிறவனாயும் இருப்பான்)


எனவே நாம் இறுதிகாலத்தில் வாழ்கின்றோம் என உறுதியாக அறிந்து கொள்ளலாம்.
(உரோ.13:11)
11 நித்திரையைவிட்டு எழுந்திருக்கத்தக்க வேளையாயிற்றென்று, நாம் காலத்தை அறிந்தவர்களாய், இப்படி நடக்கவேண்டும்; நாம் விசுவாசிகளானபோது இரட்சிப்பு சமீபமாயிருந்ததைப் பார்க்கிலும் இப்பொழுது அது நமக்கு அதிக சமீபமாயிருக்கிறது.
12 இரவு சென்றுபோயிற்று, பகல் சமீபமாயிற்று; ஆகையால் அந்தகாரத்தின் கிரியைகளை நாம் தள்ளிவிட்டு, ஒளியின் ஆயுதங்களைத் தரித்துக்கொள்ளக்கடவோம்.
13 களியாட்டும் வெறியும், வேசித்தனமும் காமவிகாரமும், வாக்குவாதமும் பொறாமையும் உள்ளவர்களாய் நடவாமல், பகலிலே நடக்கிறவர்கள்போலச் சீராய் நடக்கக்கடவோம்.
14 துர்இச்சைகளுக்கு இடமாக உடலைப் பேணாமலிருந்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைத் தரித்துக்கொள்ளுங்கள்.  

தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்
Continue Reading →

என் பாவம் நினைத்து புலம்பி நான் அழுகின்றேன்!



தந்தை பால்றோபின்சன் அவர்கள் இலங்கை தமிழ் கதோலிக்க ஒரு தேவமனிதர் இவரது பங்கு மட்டக்களப்பில் உள்ள தேத்தாதீவு வில் உள்ளது இவரது செய்திகளை பாடல்களை இத்தளத்தில் நீங்கள் காணலாம்.http://frpaulrobinson.tamilgoodnews.com/
தந்தை பால்றோபின்சன் வல்லமை கீதங்களஇல் இருந்து பாடல் என் பாவம் நினைத்து புலம்பி நான் அழுகின்றேன்!


என் பாவம் நினைத்து புலம்பி நான் அழுகின்றேன்!
கண்ணீரால் நிரம்பி உம் பாதம் நனைக்கின்றேன்...
கூந்தலால் துடைக்கின்றேன்.....

என் பாவம் நினைத்து புலம்பி நான் அழுகின்றேன்!
கண்ணீரால் நிரம்பி உம் பாதம் நனைக்கின்றேன்...
கூந்தலால் துடைக்கின்றேன்.....

மன்னியும் தேவா! என் பாவம் மன்னித்தருளும்..
மன்னியும் தேவா! என் பாவம் மன்னித்தருளும்..

என் பாவம் நினைத்து புலம்பி நான் அழுகின்றேன்!
கண்ணீரால் நிரம்பி உம் பாதம் நனைக்கின்றேன்...
கூந்தலால் துடைக்கின்றேன்.....

அயலானின் சொத்தை நான் அபகரித்தேன்...
அடுத்தவன் நாமத்தை பழுதாக்கினேன்....
அயலானின் சொத்தை நான் அபகரித்தேன்...
அடுத்தவன் நாமத்தை பழுதாக்கினேன்....

பாவஅறிக்கை நான் செய்யவில்லை...
பாவி உன் அன்பை மறந்தேனையா!
பாவஅறிக்கை நான் செய்யவில்லை...
பாவி உன் அன்பை மறந்தேனையா!

மன்னியும் தேவா! என் பாவம் மன்னித்தருளும்..
மன்னியும் தேவா! என் பாவம் மன்னித்தருளும்..

என் பாவம் நினைத்து புலம்பி நான் அழுகின்றேன்!
கண்ணீரால் நிரம்பி உம் பாதம் நனைக்கின்றேன்...
கூந்தலால் துடைக்கின்றேன்.....

ஆசை என் ஆன்மாவை அழிக்கின்றது...
அனுதினம் தீமையை நினைக்கின்றது..
ஆசை என் ஆன்மாவை அழிக்கின்றது...
அனுதினம் தீமையை நினைக்கின்றது..

களவு பொய் காமம் என்னில் நிறைந்துள்ளது....
பாவி உன் அன்பை மறந்தேனையா!
களவு பொய் காமம் என்னில் நிறைந்துள்ளது....
பாவி உன் அன்பை மறந்தேனையா!

மன்னியும் தேவா! என் பாவம் மன்னித்தருளும்..
மன்னியும் தேவா! என் பாவம் மன்னித்தருளும்..

என் பாவம் நினைத்து புலம்பி நான் அழுகின்றேன்!
கண்ணீரால் நிரம்பி உம் பாதம் நனைக்கின்றேன்...
கூந்தலால் துடைக்கின்றேன்.....
கூந்தலால் துடைக்கின்றேன்
Continue Reading →

400 வருடங்கள் உயிருடன் வாழும் மனிதர்


கைலாச மகரிஷியை பார்க்க வேண்டுமென்றால் இமயமலைக்குத்தான் போக வேண்டும். அங்க தான் இருக்கிறார். அவரை முதலில் பார்த்து அவர் சொன்ன காரியங்களை புத்தகமாக எழுதியது சாது சுந்தர் சிங். சாது சுந்தர் செல்வராஜும் அதை revise பண்ணி தற்போது எழுதியிருக்கிறார்.

கைலாச மகரிஷியின் வாழ்க்கை வரலாறு

இவர் எகிப்திலுள்ள அலெக்சாண்டிரியா பட்டணத்தில் 1594 ஆம் ஆண்டு ஒரு தீவிரமான முஸ்லீம் குடும்பத்தில் பிறந்தார். முகமது நபியை தீவிரமாக பின்பற்றுபவராக வளர்க்கப்பட்டிருக்கிறார். நல்ல ஆவிக்குரிய ஞானம் வரும்படியாக, தனது 30 ம் வயதில் உலகத்தைத் துறந்து, துறவிபோல் வாழ்ந்து , இரவும் பகலும் தியானத்திலே கழித்திருக்கிறார்.ஆனாலும் அவர் ஆத்துமாவில் கொஞ்சமும் அமைதியோ, சந்தோஷமோ உண்டாகவில்லை. இப்படி ஆத்தும வருத்தத்தோடு இருக்கையில், ஒரு நாள் ஒரு கிறிஸ்தவ ஊழியர் இந்தியாவிலிருந்து பிரசங்கம் பண்ண எகிப்து வந்திருப்பதாகக் கேள்விப்பட்டு,அவரைப் பார்க்க வேண்டும் என்று மிகவும் விருப்பப்ட்டு பெஞ்சில் அமர்ந்திருக்கையில், எதிர்பாராத விதமாக அந்த பரிசுத்தவான் இவர் முன் தோன்றியிருக்கிறார்.

அவர் இயேசு கிறிஸ்து பற்றி எடுத்து சொல்லி, அவர் இரட்சகர், பாவங்களை மன்னிக்கிறவர், வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களுக்கு இளைப்பாறுதல் தருகிறவர் என்று சில நாட்கள் சத்தியம் சொல்ல, அதைக் கேட்டு, இவர் உள்ளம் இயேசு கிறிஸ்துவின் மேல் இழுக்கப்பட்டு, அவரை இரட்சகராக ஏற்றுக் கொண்டிருக்கிறார். ஏற்றுக் கொண்டவுடன் இவர் ஆத்துமா சொல்லி முடியாத சந்தோஷத்தாலும், சமாதானத்தினாலும் நிரம்பி வழிந்திருக்கிறது. இந்த சந்தோஷம் பிறருக்கும் கிடைக்க வேண்டும், பிறகுக்கு சுவிசேஷம் அறிவிக்க வேண்டும் என்று அவர் உள்ளம் பற்றி எரிந்ததால், தனக்கு ஆண்டவரைப் பற்றி சொன்ன பரிசுத்தவானோடு இணைந்து ஊழியம் செய்யும்படி அவருடன் சேர்ந்து கொள்கிறார்.

மகரிஷியை ஆண்டவருக்குள் நடத்திய அந்த பரிசுத்தவான் பெயர் எர்னாஸ் (Yernaus). இவர் பரிசுத்த ஃப்ரான்சிஸ் சேவியரின் (St Francis Xavier 1506-1552) நெருங்கிய உறவினராவார்.எர்னாஸ் இரட்சிக்கப்பட்டவுடன் தன் மாமா ஃப்ரான்சிஸ் சேவியரைப் போல உலகமெங்கும் சென்று சுவிசேஷம் அறிவித்து வந்தார். இவர் இந்தியாவில் பல வருடங்கள் தங்கி ஊழியம் செய்தார். இவர் பேரரசர் அக்பர்(1556-1605), இன்னும் பல பெரிய மதத்தலைவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தார்.மன்னர் கான்ஸ்டாண்டைன் காலத்து கிரேக்க மொழியிலான தோல் சுருளில் எழுதப்பட்ட வேதம், ஃப்ரான்சிஸ் சேவியரிடமிருந்து, எர்னாஸுக்கு வந்து அவர் தன் கடைசிக் காலத்தில் தன் சீடனான மகரிஷிக்கு கொடுத்துச் சென்றார்.

எர்னாஸுடன் பல வருடங்கள் இணைந்து ஊழியம் செய்த மகரிஷியை, ஆவியானவரின் நடத்துதல் படி தனியே பிரிந்து போய் ஊழியம் செய்யும்படி குரு எர்னாஸ் வலியுறுத்த, அவரும் அப்படியே அடுத்த 75 வருடங்கள் பல ஊர், பல நாடுகள் சுற்றித் திரிந்து ஊழியம் செய்திருக்கிறார். அதனால் அவ்ருக்கு 21 மொழிகள் சரளமாக பேசத் தெரியும். 105 வயதானபோது, முன்போல் தீவிரமாக அலைந்து ஊழியம் செய்ய சரீரம் இடங்கொடுக்காததால், எஞ்சியுள்ள வாழ்நாட்களை ஓரிடத்தில் தங்கி ஜெபத்தில் கழிக்கலாம் என்று நினைத்து, அவர் ஊழியம் செய்யும்போது அவரை கவர்ந்த அழகான, அமைதியான கைலாய பர்வதம் (இமயமலை) ஞாபகம் வர அங்கே வந்து ஒரு குகையில் தங்கி அங்கிருக்கும் மூலிகைகள், கீரை, பழங்களைத் தின்று வாழ்ந்திருக்கிறார்.குளிர்காலத்தில் கரடிகள் குகைக்குவர இவரும் கரடிகளும் ஒன்றாய் படுத்துக்கொள்வார்களாம்! இப்படியே சில வருடங்கள் போக,எடுத்துக் கொள்ளும்படி ஆண்டவரை நோக்கித் தீவிரமாக ஜெபிக்க, ஒரு நாள் செட்டைகள் அடிக்கும் சத்தம் கேட்டிருக்கிறது. இவரது ஆன்மீகக் கண்கள் திறக்கப்ப்ட, பல தேவ தூதர்கள் இவர் இருந்த குகைக்கு இறங்கி வருவதைக் கண்டிருக்கிறார், பின்னால் இயேசு கிறிஸ்துவும் வந்திருக்கிறார். அவர் சொன்னது - 'மகனே, என் வருகை சீக்கிரத்தில் சம்பவிக்கப்போகிறது. அதுவரை நீ உலகத்தில்தான் இருக்க வேண்டும். உனக்கு மரணமில்லா சரீரம் இன்றிலிருந்து அளிக்கப்படுகிறது. பாவத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்ட இதயமும் கொடுக்கப்படும்.சரீரம் இங்கிருக்க ஆவியில் பூமியில் எங்கும் சென்று சபையின் நிலையறிந்து மக்களுக்காக மன்றாடுவதே உன் பணி' என்று சொல்லி ஆண்டவர் மறைந்து விடுகிறார். அன்றிலிருந்து இன்றுவரை மகரிஷி அந்த வேலைதான் செய்து வருகிறார்.

அவரது பெயர் என்ன என்று சாது சுந்தர் சிங் கேட்டதற்கு, ‘ முன்பு சாதாரன மனிதனாய் இருந்த போது எனக்கு ஒரு பெயர் இருந்தது. இப்ப SIN போய் SON முழுமையாக உள்ளிருப்பதால் என் பெயர் கிறிஸ்டியன் (Christian) ’ என்று சொன்னாராம்.

__________________

 மரணத்தின் பின் சம்பவிப்பது என்ன? - கைலாச மகரிஷி.

இறந்தவுடன்(ஆவி/ஆத்துமா, சரீர பந்தம் துண்டிக்கப்பட்ட) சில நிமிடங்களுக்கு ஆவிக்கு இறந்து விட்டோம் (சரீரம் இறந்து விட்டது) என்று தெரியாமல்தான் இருக்கும். இறந்தும் உயிருடன் இருக்கும் இந்த புது அனுபவம் அதற்கு ஆச்சர்யத்தைக் கொடுக்கும். பின் அது இரட்சிக்கப்பட்ட நல்ல ஆத்துமாவாக இருந்தால் ஒளியுள்ள பாதையை தேரிந்தெடுக்கும். பாவியான கெட்ட ஆத்துமாவாக இருந்தால் இருளான பாதையை தானாக தேர்ந்த்தெடுக்கும். நல்ல ஆத்துமாக்களை தூதர்கள் அழைத்துக் கொண்டு போய் பரலோகில் விடுவார்கள். பாவியான பொல்லாத ஆத்துமாக்களை பொல்லாத ஆவிகள் இழுத்துக் கொண்டு போய் விடும். எல்லா ஆவிகளும் எங்கும் சுற்றித் திரிய அனுமதி இருக்கிறது. பரலோகில் இருக்கும் ஆவிகள் பூலோகம் வர பிரியப்படுகிறதில்லை. பூலோகின் பாவம் அவர்களால் சகித்துக் கொள்ள முடியாது.

சில வகையான ஆவிகள் எங்கும் போக அனுமதி கிடையாது. அவர்கள் ஒரு இடத்தில் தனியே வைக்கப்பட்டு போதிக்கப்பட்டு, பின் பரலோகம் போவார்கள். அவர்கள் யாரெனில்

1. சிறு பிள்ளைகள், குழந்தைகள் - பரலோக காரியங்களை புரிந்து கொள்ளும் வயது வருவதற்கு முன் மரித்தவர்கள்.

2. மன வளர்ச்சி அற்றவர்கள்/மன நோய் உள்ளவர்கள் - இயேசு கிறிஸ்துவைப் பற்றி சொன்னாலும் இவர்களுக்கு புரியாது.

3.ஊமை, குருடு, செவிடர்கள் - இப்படிப்பட்ட உடல் நலக் குறைபாட்டால், ஆண்டவரைப் பற்றி அறிந்து கொள்ளாத முடியாதவர்கள்.

4. ஒரு முறை கூட சுவிசெஷம் கேட்காதவர்கள்/ இயேசு கிறிஸ்துவுக்கு முன் வாழ்ந்தவர்கள் - இவர்கள் மேசியாவின் வருகைக்காக காத்திருந்த இடம் தான் பரதீசு. ஆபிரகாமின் மடி என்று அழைக்கப்படும் இடம். 1 பேதுரு 3 : 18-22 இல் சொல்லப்பட்ட காவலிலுள்ள ஆவிகள் இவர்களே. இவர்களுக்குத் தான் இயேசு கிறிஸ்து இரட்சிப்பின் செய்தியை சொல்லி, அங்கிருந்து மீட்டு பரலோகம் அனுப்பி வைத்தார். 
ஆங்கிலத்தில் காணொளியில் உள்ளது .
தமிழ் ஆக்கம் கத்தர் நல்லவர் வலை தளத்தில் இருந்தது எடுக்கப்பட்டது  அதன் ஆசிரியருக்கு எனது நன்றி வாழ்த்துக்கள்
http://stalinwesley.blogspot.com/2011/11/blog-post_26.html
Continue Reading →

ஈழ தமிழர் விடயத்தில் மறைக்க பட்ட உண்மைகள் !

அண்மையில் எனது தளத்தில் நான் எழுதிய உலகின் சமாதனம் என்ன என்பது ஈழ தமிழர்  விடயத்தில் நிரூபணம் ஆகின்றது. பதிவை வாசித்தவர்கள் நான் பதிவில் கோரியபடி '' இவ் வசனத்தின் இறுதில் உலகம் கொடுக்கிறபிரகாரம் நான்உங்களுக்குக் கொடுக்கிறதில்லை என்று ஜேசு அன்று கூறியது மிக சரியனதே. உலகின் சமாதனம் என்ன என்பது ஈழ தமிழர் விடயத்தில் நிரூபணம் ஆகின்றது. எனவே சமாதானத்தின் இறைவனிடம் ஈழ தமிழர்  விடயத்தில் மறைக்க பட்ட உண்மைகள் வெளிவரவும் தமிழர்கள் மன விருப்பத்தின் படி நிலையான சமாதானம் கிடைக்க வேண்டுவோம்  ''  அனைவரும் செபித்தமைக்கு எனது நன்றி கத்தர் தங்களது செபத்தை கேட்டு இதுவரை இலங்கை தமிழர் விடயத்தில் மறைக்க பட்ட உண்மைகள் இன்று அறிக்கையாக வெளிவந்திருப்பது அனைவருக்கும் மகிழ்ச்சி. தொடர்ந்து  ஈழ  தமிழருக்காக செபித்து வாருங்கள் 
கத்தருக்கு நன்றி  தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்
Continue Reading →

கிறிஸ்தவர்களை உளவு பார்க்க சென்றவர்' தீர்க்கதரிசியானது எப்படி ?

கிறிஸ்தவர்களை உளவு பார்க்க சென்றவர்' தீர்க்கதரிசியானது எப்படி ?

Continue Reading →

உலகின் சமாதனம் என்ன என்பது இலங்கை தமிழர் விடயத்தில் நிரூபணம் ஆகின்றது.

இந்த நூற்றாண்டில் இடம் பெற்ற மிக கொடூரமான இன அழிப்பு என்றால் இலங்கை தமிழ் இன அழிப்பை குறிப்பிடலாம். தமிழ் இன அழிப்பு இடம் பெற்ற வேளை ஐநா சபையும் இந்தியாவை ஆளும் அரசும் ஏன் உலகமே வேடிக்கை பார்த்தது. போர் முடிந்தது என இலங்கை அரசு அறிவித்ததும் அனைத்து நாடுகளும் இலங்கை அரசை புகழ்ந்ததுடன் இலங்கையில் நிரந்தர சமாதானம்  நிலவுகின்றது எனவும் இலங்கை தமிழர் மிக சந்தோசமாக வாழ்கின்றனர் என கூறிவருகின்றனர் .ஆனால் அங்கோ ஐந்து தமிழருக்கு ஒரு இராணுவம் என கண்காணிக்க படுவதுடன் பல அடக்குமுறை இடம்பெற்று வருவது அனைவரும் அறிந்த உண்மை . அதானால் தான் அன்று  ஜேசு கூறினார்

யோவான் 14:27 சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான்உ ங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலுமிருப்பதாக.

                       
                            இவ் வசனத்தின் இறுதில் உலகம் கொடுக்கிறபிரகாரம் நான்உங்களுக்குக் கொடுக்கிறதில்லை என்று ஜேசு அன்று கூறியது மிக சரியனதே. உலகின் சமாதனம் என்ன என்பது இலங்கை தமிழர் விடயத்தில் நிரூபணம் ஆகின்றது. எனவே சமாதானத்தின் இறைவனிடம் இலங்கை தமிழர் விடயத்தில் மறைக்க பட்ட உண்மைகள் வெளிவரவும் தமிழர்கள் மன விருப்பத்தின் படி நிலையான சமாதானம் கிடைக்க வேண்டுவோம்  

 தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்

ஜெபத்தோட்ட ஜெயக்கீதங்கள் vol 13 இல் இருந்தது 

கட்டிப் பிடித்தேன் உந்தன் பாதத்தை
கண்ணீரால் நனைக்கின்றேன் கர்த்தாவே
இலங்கையிலே யுத்தங்கள் ஓய வேண்டுமே
இளைஞரெல்லாம் இயேசுவுக்காய் வாழ வேண்டுமே
  இரங்கும் ஐயா மனம் இரங்குமையா

1. துப்பாக்கி ஏந்தும் கைகள்-‍ உம்
    வேதம் ஏந்த வேண்டும்
    தப்பாமல் உம் விருப்பம்
    எப்போதும் செய்ய வேண்டும்

2. பழிக்கு பழி வாங்கும்(எபி 10:30)
    பகைமை ஒழிய வேண்டும்
    மன்னிக்கும் மனப்பான்மை (எபே4:32)
    தேசத்தில் மலர வேண்டும் 

3. பிரிந்த குடும்பமெல்லாம்
    மறுபடி இணைய வேண்டும்
    பெற்றோரின் கண்ணீர் எல்லாம்
    களிப்பாய் மாற வேண்டும்

4. வீடு இழந்தவர்கள்
    இடங்கள் பெயர்ந்தவர்கள்
    மறுவாழ்வு பெற வேண்டும்
    மகிழ்ச்சியால் நிரம்ப வேண்டும்



Continue Reading →

அனைத்து கிறஸ்தவ தொலை கட்சியை காண

அனைத்து  கிறிஸ்தவ  தொலை கட்சியை ஒரே தளத்தில் காண அத்துடன் தமிழில் வேதாகமத்தை வாசிக்க

இலங்கை தமிழ் கத்தோலிக்க தொலைக் காட்சியை காண  http://www.tcnlnet.com/tcnl-tv.html

 

Continue Reading →

நரகத்தின் வாசல் இதுதானோ ?

சொர்கத்தின் வாசல் படி, என்ற சொல்லைக் கேட்டிருப்பீர்கள். ஆனால் அது எங்கே இருக்கிறது என்று கேட்டால் யாருக்கும் தெரியாது. சொர்க்கம் என்றால் அது வானத்தில் அல்லது இந்திரலோகத்தில் இருப்பதாக பலரும் கூறுவார்கள். ஆனால் பூமியில் ஒரு நரகத்தின் வாசல் படி பலகாலமாக இருக்கிறதே யாராவது அறிவீர்களா ?

ஆம் இதனை ஆங்கிலேயர், நரகத்தின் வாசல் என்று அழைக்கிறார்கள். டேக்மேனிஸ்தான் (அக்பானிஸ்தானுக்கு அருகில் உள்ள நாடு) என்னும் நாட்டில் உள்ள கராக்கும் என்னும் பாலைவனத்தில் இந்த நரகத்தின் வாசல் காணப்படுகிறது. சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் திடீரெனத் தோன்றிய இந்தத் துளையில்(ஓட்டையில்) இருந்து எப்போதும் தீ பிளம்பு கக்கியவண்ணம் உள்ளது. இது எரிமலை அல்ல. எப்போதும் எரிந்துகொண்டு இருக்கும் இந்த ஓட்டையின் ஆழத்தை எவராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. காரணம் அதனுள் எரியும் நெருப்பு ! உலகில் உள்ள அதிசயங்களில் ஒன்றாக இதனை ஏன் இன்னும் இணைக்கவில்லை என்று நினைக்கும் அளவுக்கு , இது அமைந்துள்ளது.




























 நரகத்தை பற்றி இறைவன் தளத்திலிருந்து 

ஜேசு சாமி என்ற ஒருவர் இருக்கிறார்

Continue Reading →

உனக்கு உதவி செய்யும் தெய்வம்


வாழ்க்கையில்  ஏற்படும் பலவிதமான கஷ்டங்கள் துன்பங்கள் அனைத்தையும் உனக்காக அநுபவித்து உன் கூடவே வரும்  ஒரே  ஒரு தெய்வம்  ‘நான் உன்னை விட்டு விலகுவதும் இல்லை நான் உன்னை கைவிடுவதும் இல்லை’ (எபி.13:5).



>உன்னைக் காக்கும் தேவன் தூங்குவதுமில்லை, அயர்வதுமில்லை.
ஜேசு சாமி என்ற ஒருவர் இருக்கிறார்

Continue Reading →

ஆணில் இருந்து பெண் ?


மனிதன் தோற்றம் தொடர்பாக பலவிதமான கொள்கைகள்  காணப்படுகின்றது. இக்கொள்கைகளில் கூர்ப்புக் கொள்கை இன்று பலராலும் ஓரளவு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனாலும் சிறப்புப்படைப்புக் கொள்கையாகிய கத்தர் உலகத்தை படைத்தார் என்ற கொள்கை இன்று வரை நிராகரிக்கபடவில்லை சரி படைப்பு கொள்கையை அறிய வேதாகமத்தை புரட்டினால் படைப்பு தொடர்பாக இரண்டுவிதமாக உள்ளது. விளங்கிக் கொள்ள சிரமம் என்பது உண்மையே என்றாலும் வேதாகமத்தில் எழுதப்பட அனைத்துக்கும் ஏதாவது ஓரு மறை பொருள் உண்டு .சில மாதங்களின் முன்னர் நான் தாய் போல் மதிக்கும் ஓரு அம்மையாரிடம் உரையாடிக் கொண்டிருந்தேன். அவரிடம்  படைப்பு சம்பந்தமாக உரையாடியபோது  அதில்  ஆதாமின்  விலா எலும்பில் இருந்து எப்படி ஏவாழை உருவாக்க முடியும்?? இது சாத்தியப்படாது என்றேன்  .  அந்த அம்மையார் புன்னகையுடன் பதில் அழித்தார்.

இரண்டாம் அதிகாரம்: கர்த்தர்  ஆதாமை  உருவாக்கி அவன் தனியாய் இருப்பது நல்லதல்ல என்று கருதி அவன் விலா எலும்பை எடுத்து ஏவாளை உருவாக்கினார்  
18. பின்பு தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார்
22. தேவனாகிய கர்த்தர் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டு வந்தார்.

ஆதியில்  ஆணின் குரோமோசோம் XX ஆக இருந்து .
கடவுள் ஆணின் குரோமோசோமின் ஒரு பகுதியை எடுத்தார் ஆதலினால் XX ஆக இருந்த ஆணின் குரோமோசோம்
XY மாறிவிடது   ஆணின் குரோமோசோமின் ஒரு பகுதியில் இருந்தது கடவுள் பெண்ணை XX ஆக உருவாக்கினார்.எனவே பெண்ணே குழந்தைகளை பிரசவிக்க வேண்டியுள்ளது. என்றார் நான் ஆச்சரிம் அடைந்தேன் .


ஸ்திரீயானவள் புருஷனிலிருந்து தோன்றுகிறதுபோல, புருஷனும் ஸ்திரீயினால் தோன்றுகிறான்; சகலமும் தேவனால் உண்டாயிருக்கிறது.  

1 கொரிந்தியர் 11:12

 தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்

ஜேசு சாமி என்ற ஒருவர் இருக்கிறார்

Continue Reading →

செபிப்பது எப்படி ??


செபிப்பது என்பது  எப்படி ? செபிக்கும் முறை ,செபத்தின் வகைகள் 


ஜேசு சாமி என்ற ஒருவர் இருக்கிறார்

Continue Reading →

விண்ணப்பத்தை கேட்டருளும்

விண்ணப்பத்தை கேட்டருளும் 
விண்ணில் வாழும் ஜேசு தேவா
 விண்ணப்பத்தை கேட்டருளும்
 விண்ணில் வாழும் ஜேசு தேவா 
வா வா தேவா வா வா தேவா
வா வா தேவா என் மனக் கோவிலில் வா தேவா 
வா வா தேவா வா வா தேவா வா வா தேவா
 என் மனக் கோவிலில் வா தேவா
 அப்பா பிதாவே அன்பான தேவா  மனிதர்கள் குறை நீக்கும் ஆண்டவரே  அப்பா பிதாவே அன்பான தேவா  மனிதர்கள் குறை நீக்கும் ஆண்டவரே 
அன்பான தெய்வமே ஆவியை தாரும் ஆவியின் வல்லமையால் நிறைத்தருளும் 
அன்பான தெய்வமே ஆவியை தாரும் ஆவியின் வல்லமையால் நிறைத்தருளும்
விண்ணப்பத்தை கேட்டருளும் விண்ணில் வாழும்ஜேசு தேவா ......
துன்பம் துயரங்கள் சூழ்ந்திடும் வேளை மனிதனே ஆண்டவரே துதித்திடுங்கள் (2)
ஆவியில் புதுப் படைப்பாய் ஆகிடவே  மனிதனே ஆண்டவரே துதித்திடுங்கள்(2)

தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்
Continue Reading →

பில்லி சூனியம், ஏவல், ஜாதகம்

ஜாதகம் நல்ல நேரம் ஏவல் பில்லி சூனியம் என்பவறை நம்பி வாழ்கையை இழந்தவர்கள்  பலர்.  இந்த காரியத்தில் சில கிறிஸ்தவர்களும் ஈடுபடுகிறனர்.   காரணம் விசுவாச குறைவு அத்துடன் இந்துகள் மத்தியில் வாழுவதால் அவர்களை பின்பற்றுகின்றனர்.  எதுவாக இருந்தாலும் கிறிஸ்தவர்கள் இக்காரியங்களில் ஈடுபடுவது தேவ கோபத்தை ஏற்படுத்தும்,  இவை அனைத்தும் தேவனுக்கு விரோதம் ஆனவை .
                                              இக்காரியங்களை பற்றி மிக விளக்கமாக பரலோகபாதை என்னும் வலைப்பூவில் எழுதியுள்ளார். இவ் வலைப்பதிவு ஆசிரியருக்கு எனது நன்றி எனது வாழ்த்துக்கள்
இதோ லிங்  இங்கே 



ஜேசு சாமி என்ற ஒருவர் இருக்கிறார்

Continue Reading →

எனது கை தொலைபேசி

அண்மையில் எனது கை தொலைபேசி தொலைந்துபோனது.  எனவே ஒரு புதிய  கை தொலைபேசியை வாங்கி அதன் இலக்கத்தை சில நண்பர்களுக்கு மட்டும் கொடுத்தேன். சில மாதங்களின் பின்னர் எனது சகோதரர் ஒரு விடயம் தொடர்பாக  எனது புதிய கை தொலைபேசி இலக்கத்தை ஒருவரிடம் கொடுத்துவிட்டார். அவர் என்னிடம் நீண்ட நேரம் பேசினார். இறுதியில் அவரது குரல் மிகவும் பரிட்சியமாக இருந்தது. எனவே அவரிடம் வினவினேன். அவரும் என்னை அடையாளம் கண்டு கொண்டார்.
                              இச் சம்பவத்தின் பின்னர் எனக்கு ஒரு வேத வசனம் நினைவுக்கு வந்தது, காரணம் அவரது குரலை வைத்தே அவரை அடையாளம் கண்டு கொண்டேன்.  இதோ வேத வசனம்  
யோவா 10: 27
 என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின் தொடர்கின்றன, என்கிறார் ஆண்டவர்.  
தேவனின் குரலை கேட்பது எப்படி ?

அன்றாடம் இடைவிடாது இறைவனிடம் இறைஞ்சி வேண்ட வேண்டும் .இதன் மூலம் உங்களது குரல் தேவனுக்கு பரிட்சியமாகும் .பின்னர் தேவனது குரல் உங்களுக்கு பரிட்சியமாகும்.நீங்களும் தேவனின் குரலை கேட்கலாம். கிறிஸ்தவர்களுக்கு வேதாகாமம் ஒரு கை தொலைபேசி போன்றது.வேதாகாமத்தை  வாசிப்பதன் மூலமும் தேவனை அறிவதுடன் அவரது குரலையும் நீங்களும் கேட்கலாம்.
தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்


Continue Reading →

நான் அவர்களை கைவிடுவதில்லை

 கிறீஸ்த்துவை பின்பற்றி வாழுதல் என்பது  இலேசான காரியம் இல்லை என்னை போன்ற  சிலர் சிறிய துன்பம் ஏற்பட்டவுடன் கிறீஸ்த்துவை விட்டு விலகி விடுவர்.  அப்படிப்பட்டவர்களுக்கு தேவன் எப்படி துன்பங்களை வெற்றி கொள்வது? என புனித பிரிஜித்தாவிற்கு கூறிய​வை.
எனது பகைவர்கள் மிகக் கொடிய காட்டு விலங்குகள் போல நிறைவு பெறுவதுமில்லை ஓய்வு எடுப்பதுமில்லை. அவர்களது இதயம் எனது அன்பைப்பற்றி அறியாததால் அவர்களுக்கு எனது துயரமிக்க பாடுகள் கொஞ்சம் கூட நினைவுக்கு வருவதில்லை. அவர்களில் ஒருவரது இதயம் கூட ஒருமுறையேனும் ஆண்டவரே நீர் எங்களை மீட்டுக் கொண்டீர் உமது துயரமிக்க பாடுகளுக்காக நீர் போற்றப்படுவீராக! என்ற வார்த்தைகளை தப்பித் தவறிக்கூட கூறியதில்லை. என்மீது தெய்வீக அன்பில்லாத எதிரிகளின் இதயங்களில் என் ஆன்மா எவ்வாறு குடிகொள்ள முடியும்? இவர்கள் தங்கள் விருப்பத்திற்காக அடுத்தவர்களுக்கு எளிதாக நம்பிக்கை துரோகம் செய்கிறார்களே! அவர்களின் இதயம் உலக ஆசையெனும் வஞ்சகப் புழுக்களால் நிறைந்துள்ளது.

சாத்தான் அவனது தீமைகளை அவர்களது வாயில் வைத்துள்ளான். அதனால் என் வார்த்தைகளுக்கு எந்தவித தொடர்பும் இல்லாமல் போனது. மேலும் என் எதிரிகளை என் நண்பர்களிடமிருந்து இரம்பத்தால் அறுப்பதைப்போல அறுத்து எடுக்க வேண்டியுள்ளது. இரம்பத்தால் அறுபட்டுச் சாவதைவிட கொடுமையான சாவு வேறெதுவுமில்லை. அவர்கள் அனைத்துவித தண்டனைகளுக்கும் ஆளானவர்கள், சாத்தான் அவர்களை இரம்பத்தால் அறுப்பான் என்னிடமிருந்தும் அவர்கள் அறுபட்டுப் போவர்கள் ஆகவே இரண்டு பக்கமும் அறுபடுவார்கள். என் எதிரிகளால் அவர்களைச் சேர்ந்தவர்களும் என்னிடமிருந்து அறுபட்டுப்போவதால் அவர்கள் எனது மிகுதியான வெறுப்புக்குள்ளானவர்கள்.

இக் காரணங்களுக்காகவும் சாத்தான் எனது உண்மையான பகைவனாக இருப்பதாலும் அவனிடமிருந்து என் மக்களை பிரிப்பதற்காக நான் எனது நண்பர்களை அனுப்புகின்றேன். அவர்களை போருக்குப் புறப்படும் படை வீரர்களைப்போல அனுப்புகிறேன். தீயவற்றிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு எனக்காக தன்னுயிரைத் தருபவரே எனது உண்மையான படைவீரர். என் வாயினின்று வரும் வாரத்தைகளை அவரகள் ஈட்டியாகப் பயன்படுத்துவாரகள் அவரகளது கைகளில் நம்பிக்கை என்னும் போரவாளை வைத்திருப்பார்கள். அவர்களது மார்பு எனது அன்பு என்னும் மார்புக் கவசத்தை அணிந்து இருப்பதால் என்ன நடந்தாலும் என் மீது அவர்கள் கொண்டுள்ள அன்பு குறைந்துவிடாது. நடப்பவை அனைத்தையும் பொறுமையுடன் ஏற்றுக்கொள்ள பொறுமை என்னும் பாதுகாப்பு கவசத்தை அவர்கள் பெற்றிருக்க வேண்டும். தங்கத்தைப் பாதுகாப்பது போல நான் அவர்களை மூடி வைத்துள்ளேன்: இப்போது எனது வழியில் அவர்கள் முன்னேறிச் செல்ல வேண்டும்.

நீதிமுறைகளின்படி நான் மனிதனாகப் பிறந்து பாடுகளை அனுபவிக்காமல் இருந்திருந்தால் மேன்மை மிகுந்த எனது அரசாட்சியில் நானே நுழைந்திருக்க முடியாமல் போயிருக்கும். அப்படியிருக்க என் நண்பர்கள் எப்படி நுழைய முடியும்? அவர்களது ஆண்டவரான நானே துன்பத்திற்குள்ளானேன் அப்படியிருக்க அவர்கள் துன்பப்படுவதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது?
அவர்களது ஆண்டவரான நான் சாட்டையால் அடிக்கப்பட்டேன் என்றால் அடுத்தவர் கூறும் வார்த்தைகளால் அவர்கள் அடிபடுவது ஒன்றும் பெரிதல்ல. அவர்கள் எதற்கும் அஞ்சத் தேவையில்லை ஏனென்றால் நான் அவர்களைக் கைவிடுவதில்லை.

சாத்தானால் கடவுளது இதயத்தை எடுக்கவோ அவரிடமிருந்து அதைப் பிரிக்கவோ இயலாது. அதைப்போலவே என்னிடமிருந்து அவன் என் மக்களைப் பிரித்தெடுக்க முடியாது. எனவே எனது பார்வையில் என் நண்பர்கள் தூய தங்கத்திற்கு ஈடானவர்கள் சிறிதளவு நெருப்பில் அவர்கள் சோதிக்கப்பட்டாலும் அவர்களை நான் கைவிடுவதில்லை அவ்வாறு சோதிக்கப்படுவது அவர்களது மேன்மைக்கான செயலாகும்.
காண்க http://www.prophecyfilm.com/tamil/revelations/book1/b1_chapter6.htm 
அவர்களை நான் கைவிடுவதில்லை 

தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்


ஜேசு சாமி என்ற ஒருவர் இருக்கிறார்

Continue Reading →

இந்தப் பூமி அழிந்து விடப்போகின்றதா? எப்போது 2012 அல்லது 2060 ??

இந்தப் பூமி அழிந்து விடப்போகின்றதா? எப்போது  2012 அல்லது  2060

ஜேசு சாமி என்ற ஒருவர் இருக்கிறார்

Continue Reading →

அருளின் வடிவம்

உம்மைக் கண்டாலே என்றும்   ஆனந்தமையா 
உம்மை புகழ்ந்தால் என் நாவு  இனிமையாகும்  
உன் வழி சென்றால் என் கால்கள் தாளரவில்லை 
உம்மை நினைத்தால் என் நினைவுகள் நிறைவாகிறது 
என் கைகள்  உம்மையே  வேண்டி  நிற்கிறது 
எங்கும் இருப்பவர் நீரே

என் குறைகளைத் தீர்ப்பவர் நீரே 
அன்பு உள்ளம் கொண்டவரே
அருளின் வடிவம் கொண்டவரே 
அன்பாய்  என்னைக் காப்பவரே
ஆறுதல் எனக்குத் தருவபரே 
அவனியில் உம் அன்புக்கு  நிகர் யாரு?

Continue Reading →

ஜேசு சாமி என்ற ஒருவர் இருக்கிறார்

                                       உன் திராணிக்குமேலே சோதிக்கமாட்டேன்
சஞ்சலம் நிறைந்த வாழ்விலும்,சங்கடம் மலிந்த உலகிலும்,ஒவ்வொரு மனிதனையும் துயரத்தில் ஆழ்த்தி துயரப்படுத்தும் இவ்வேளையில், எரிகின்ற வீட்டில்  புடுங்குவது  போலவும், மதிலால் விழ்ந்தவனை மாடு ஏறி மிதிப்பது போலவும், பலர் மேலும் மேலும் கடினமான வார்த்தைகளாலும், தீய  வார்த்தைகளாலும்,  ஏசி உங்களை விரக்த்தியின்  விளிம்புக்குக் கொண்டு போகலாம். இதற்கு முதற் காரணம் ஒவ்வொரு மனிதனின் தனிமை உணர்வு எனக்காக யாருமே  இல்லையே! நான்  சொல்வதை  யாரும் கேட்கவில்லையே , எல்லோரும்    எனக்கு தீமையே செய்கின்றனர். நன்மை செய்ய எவருமே இல்லையே, என்ற எண்ணமே, எந்த  மனிதனையும் விரக்த்தியின்  விளிம்புக்கு கொண்டு போகிறது. 

நண்பனே  உனக்காகப் பரிதாபப்படவும், உனக்காக இரக்கப்படவும், ஏன் உனக்காக தனது   உயிரையே  உனக்காகக் கொடுத்த ஜேசு சாமி என்ற ஒருவர் இருக்கிறார்




.'' என் உள்ளங்கையில் உனது பெயரை எழுதி வைத்திருக்கின்றேன்''  என்கிறார். ஜேசு ''முதல் தரமான ஆடையைக் கொண்டு உடுத்துங்கள். இவனுடைய கைக்கு மோதிரமும் ,காலுக்கு  மிதியடியும்,  அணியுங்கள்  கொளுத்த கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள். நாம் மகிழ்து  விருந்து  கொண்டாடுவோம் 
ஏனெனில் என் மகன் இவன் இறந்து போயிருந்தான் மிண்டும்  உயிர்  பெற்று வந்திருகின்றான் . காணாமல் போயிருந்தான்.  மிண்டும்  கிடைத்துள்ளான்'' என்கிறார் ஜேசு சாமி (காண்க லூக்கா அதிகாரம் 15:வசனம்  22-25 ) ஜேசு மீது விசுவாசம் கொண்டு ஏற்றுக் கொண்டால் போதும். அவர் சகலதையும் பார்த்து  கொள்வார் . உங்களது தேவைகளுக்காக எப்படி செபிப்பது   என்று உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். அதற்காக நீங்கள் கவலைப்பட  வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு இரண்டு  தளம் உள்ளது.



1) இத்தளத்தில் நீங்கள் Skype மூலம் இந்திய நேரப்படி  சாயுங்காலம் 7 pm to 9pm வரை தந்தை அவர்களை தொடர்பு கொள்ளலாம் அத்துடன் ஜெப அறையில் நீங்களும்    செபித்து உங்களது தேவைகளை பெற்று கொள்ளுங்கள் இந்த ஜெப அறையில் எப்பொதும் நீங்கள் தனிமையில் இல்லை. இரவு பகல் இருபத்து நான்கு மணி நேரமும், இந்த அறையில், உங்களோடு, ஒரு கூட்டம் ஊழியர்கள், நோன்பிருந்து ஜெபிக்கிறார்கள். அவர்களது பலியாகும் ஜெபம், இந்த அறையிலிருந்து, விண்ணை நோக்கி, எழும்புகிறது. எனவே நீங்கள் தனியாகவில்லை  அத்துடன் இந்த தளத்தில் வடிவமைப்பு என்னை பிரமிக்க வைத்ததுடன் உண்ணர்வை தளத்துடன் ஒன்றிக்க வைக்கின்றது  link http://www.catholicpentecostmission.in/prayer_room.html

 2) இத்தளத்தில் உங்களது செபத்தேவை என்ன என்பதை தெரிவு  செய்து  அந்த சகோதரன் செபிக்கும்  போது   நீங்களும்  விசுவாசத்துடன் செபித்து அற்புதத்தை பெற்றுக் கொள்ளுங்கள் இத்தளத்தில் Tamil    — > Bro. Appadurai    — > go என்பதை கிளிக் பண்ணவும்   link http://www.prayermountain.in/Home/Audio_Prayer.php


இரண்டு  தளங்களில் உங்களுக்கு விரும்பியதில் இணைத்து அற்புதத்தை பெற்று கொள்ளுங்கள்  உங்களை கத்தர் ஜேசு நிறைவாக  ஆசிர்வதிப்பாராக. ஆமென் 
உன்னைக் காக்கும் தேவன் தூங்குவதுமில்லை, அயர்வதுமில்லை.

உன்னைக் காக்கும் தேவன் தூங்குவதுமில்லை, அயர்வதுமில்லை.
Continue Reading →